பண்ணை இயந்திரமயமாக்கல் விவசாயிகளுக்கு பயிற்சி முகாம்
மல்லசமுத்திரம்: மல்லசமுத்திரம் வட்டாரம், ஒருங்கிணைந்த வேளாண்மை விரி-வாக்க மையத்தில் நேற்று, அட்மா திட்டத்தில் பண்ணை இயந்தி-ரமயமாக்கல், புதிய இயந்திரங்களை பிரபலப்படுத்துதல் பயிற்சி முகாம் நடந்தது. வட்டார வேளாண்மை உதவி இயக்குனர் யுவராஜ் தலைமை வகித்தார். அவர், வேளாண்துறை சார்ந்த மத்-திய, மாநில அரசு திட்டங்கள், விவசாயிகளுக்கு தனிகுறியீடு வழங்கும் முகாம் குறித்து விளக்கமளித்தார். துணை வேளாண் அலுவலர் பழனிவேல், 'உயிர் உரங்கள், அதன் பயன்கள் குறித்து எடுத்துக்கூறினார்.
வட்டார தொழில்நுட்ப மேலாளர் கலையரசி, 'அட்மா' திட்ட செயல்பாடுகள், உழவன் செயலி பதிவிறக்கம் மற்றும் பயன்கள் குறித்து கூறினார். இறுதியில், மரவள்ளி குச்சிகளை துாளாக்குதல் குறித்து செயல்விளக்கம் செய்து காண்பிக்கப்பட்டது. பி.ஜி.பி., வேளாண்மை கல்லுாரியிலிருந்து கிராமப்புற அனுபவ பயிற்-சிக்கு, மல்லசமுத்திரம் வட்டாரத்திற்கு வந்துள்ள மாணவர்கள், மண்மாதிரி சேகரித்தல் பற்றி விவசாயிகளுக்கு விளக்கமளித்தனர். ஏற்பாடுகளை, உதவிவேளாண்மை அலுவலர்கள் மைதிலி, சரண்யா, அட்மா திட்ட அலுவலர்கள் செய்திருந்தனர்.
மேலும்
-
கல்லூரி மாணவிக்கு பாலியல் தொல்லை; விடுதி வாட்ச்மேன் கைது!
-
சென்னையில் மனநிலை பாதிக்கப்பட்ட நபர் அடித்துக்கொலை; போலீஸ் கண்முன்னே துயரம்!
-
பாட்டும் வயலினும்...: அற்புத 'அய்யர் சகோதரிகள்'
-
தர்மபுரி தி.மு.க., மாவட்ட செயலாளர் பதவி பறிப்பு
-
போப் உடல்நிலை கவலைக்கிடம்: வாடிகன் தகவல்
-
தெலுங்கானாவில் சுரங்கப்பாதையில் சிக்கியவர்களை மீட்கும் பணி தீவிரம்