அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளி இல்லை: எட்டாக்கனியான 7.5 சதவீத இட ஒதுக்கீடு
தாரமங்கலம்: தாரமங்கலம் நகராட்சியில் அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளி இல்லாததால் அப்பகுதி மாணவர்களுக்கு அரசின், 7.5 சதவீத உள் இடஒதுக்கீடு என்பது எட்டாக்கனியாக மாறியுள்ளது.
சேலம் மாவட்டம் தாரமங்கலம் நகராட்சியில், 2011ம் ஆண்டு மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி, 30,000க்கும் மேற்-பட்டோர் வசிக்கின்றனர். அங்கு, 4 துவக்கப்பள்ளி, 5 நடுநிலை, ஒரு அரசு மகளிர் மேல்நிலைப்பள்ளி, ஒரு அரசு உதவி பெறும் மேல்நிலைப்பள்ளி உள்ளன. ஆனால் மாணவர்களுக்கு, அரசு உயர்நிலை, மேல்நிலைப்பள்ளிகள் இல்லை.இதனால் துவக்கப்பள்ளி முடிக்கும் மாணவர்கள், 6ம் வகுப்புக்கு, 110 இடங்கள் மட்டும் கொண்ட, துட்டம்பட்டி பைபாஸில் உள்ள மாதிரிப்
பள்ளியில் சேர்கின்றனர். அங்கு அனைவருக்கும் இடம் கிடைப்ப-தில்லை. அதேபோல் நடுநிலைப்பள்ளி முடிந்து, 9ம் வகுப்பில் சேரவும், அங்குள்ள அரசு உதவி பெறும் மேல்நிலை, தனியார் பள்ளிகளுக்கு செல்ல வேண்டிய நிலை உள்ளது. சிலர், 7.5 சத-வீத இட ஒதுக்கீடு தேவை என்பதால், தொடர்ந்து அரசு பள்-ளியில் படிக்க, 10 கி.மீ.,ல் உள்ள வனவாசி, ஜலகண்டாபுரம் அரசு பள்ளிகளுக்கு சென்று படிக்கின்றனர்.
அதேநேரம் தாரமங்கலம் ஒன்றியத்தில் உள்ள பல்வேறு ஊராட்சி-களில் அரசு மேல்நிலைப்பள்ளிகள் உள்ள நிலையில், நகராட்சி மாணவர்களுக்கு அரசு உயர்நிலை, மேல்நிலைப்
பள்ளிகள் இல்லாதது, சிரமத்தை ஏற்படுத்துகிறது.
இதுகுறித்து தறித்தொழிலாளி பாலசுந்தரம், 44, கூறுகையில், ''என் மகன், அண்ணன் மகன், ஜலகண்டாபுரம் சாலையில் உள்ள அரசு நடுநிலைப்பள்ளியில், 6 முதல், 8ம் வகுப்பு வரை படித்-தனர். தொடர்ந்து அரசு பள்ளியில் படிக்க, மேல்
நிலைப்பள்ளி இல்லாததால், இருவரையும் தனியார் பள்ளியில் சேர்த்தோம். அங்கு அதிக பணம் செலவாவதோடு, அரசின், 7.5 சதவீத இட ஒதுக்கீடு கிடைக்காமல் போகிறது,'' என்றார்.
தறித்தொழிலாளி முரளி, 47, கூறுகையில், ''மகளிர் பள்ளி இருந்-ததால், மகள் அங்கு படித்து, 7.5 சதவீத இட ஒதுக்கீட்டில், மாநி-லத்தில், 2ம் இடம் பெற்று மருத்துவ கல்லுாரியில் படிக்கிறார். ஆண்கள் மேல்நிலைப்பள்ளி இல்லாததால், மகன், அரசு உதவி பெறும் பள்ளியில் படித்தார். அங்கு, 7.5 சதவீத இட ஒதுக்கீடு இல்லாததால், தற்போது தனியார் கல்லுாரியில் பிசியோதெரபி படிக்கிறார். அதனால் அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளி தொடங்க வேண்டும்,'' என்றார்.
தி.மு.க.,வை சேர்ந்த, நகராட்சி தலைவர் குணசேகரன் கூறு-கையில், ''மாணவர்களுக்கு நடுநிலைப்பள்ளி வரை மட்டும் உள்-ளது. 7.5 சதவீத இட ஒதுக்கீடு கிடைக்காததால், அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளி கேட்டு, முதல்வர், கல்வி அமைச்சருக்கு மனு அளித்துள்ளேன்,'' என்றார்.
மேலும்
-
பெண்கள் சக்தி நாட்டை வலுப்படுத்தும்; மன் கி பாத் நிகழ்ச்சியில் பிரதமர் மோடி பேச்சு
-
கல்லூரி மாணவிக்கு பாலியல் தொல்லை; விடுதி வாட்ச்மேன் கைது!
-
சென்னையில் மனநிலை பாதிக்கப்பட்ட நபர் அடித்துக்கொலை; போலீஸ் கண்முன்னே துயரம்!
-
பாட்டும் வயலினும்...: அற்புத 'அய்யர் சகோதரிகள்'
-
தர்மபுரி தி.மு.க., மாவட்ட செயலாளர் பதவி பறிப்பு
-
போப் உடல்நிலை கவலைக்கிடம்: வாடிகன் தகவல்