மர்மமான முறையில் கிணற்றில் இறந்து கிடந்த மாணவர்
குளித்தலை: கரூர் மாவட்டம், குளித்தலை அடுத்த சிவாயம் பஞ்சாயத்து, சடையம்பட்டியை சேர்ந்தவர் கூலித் தொழிலாளி சுப்பிரம-ணியன், 45. இவருடைய இளைய மகன் அருண், 21; தொட்டி-யத்தில் உள்ள தனியார் பொறியியல் கல்லுாரியில், மெக்கா-னிக்கல் இன்ஜினியரிங் பிரிவில் நான்காம் ஆண்டு படித்து வந்தார்.
நேற்று முன்தினம் இரவு முதல், இவரை காணவில்லை என பெற்றோர், உறவினர்கள் தேடி வந்துள்ளனர். இந்நிலையில், நேற்று காலை வெள்ளைசாமி என்பவரின் கிணற்று பக்கம் சென்ற போது, அருணின் காலணி அந்த பகுதியில் இருப்பதை கண்டு அதிர்ச்சியடைந்தனர். இதையடுத்து அவரது உறவினர்கள், முசிறி தீயணைப்பு துறைக்கு தகவல் தெரிவித்தனர்.சம்பவ இடத்திற்கு சென்ற தீயணைப்பு வீரர்கள், 50 அடி ஆழ-முள்ள கிணற்றில் இறங்கி தேடிய போது, கால்கள் கட்டிய நிலையில் அருண் சடலமாக மீட்கப்பட்டார். குளித்தலை போலீசார், அருண் சடலத்தை கைப்பற்றி, குளித்தலை அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்-தனர்.
மாணவரின் இறப்பு மர்மமாக உள்ளது குறித்து, பல்வேறு கோணங்களில் குளித்தலை போலீசார் விசாரணை நடத்தி வரு-கின்றனர்.
மேலும்
-
கந்தர்வகோட்டையில் குடிநீர் விநியோகிப்பாளர் தலையில் கல்லைப் போட்டுக் கொலை .
-
பெண்கள் சக்தி நாட்டை வலுப்படுத்தும்; மன் கி பாத் நிகழ்ச்சியில் பிரதமர் மோடி பேச்சு
-
கல்லூரி மாணவிக்கு பாலியல் தொல்லை; விடுதி வாட்ச்மேன் கைது!
-
சென்னையில் மனநிலை பாதிக்கப்பட்ட நபர் அடித்துக்கொலை; போலீஸ் கண்முன்னே துயரம்!
-
பாட்டும் வயலினும்...: அற்புத 'அய்யர் சகோதரிகள்'
-
தர்மபுரி தி.மு.க., மாவட்ட செயலாளர் பதவி பறிப்பு