பெண் பாலியல் பலாத்கார விவகாரம் போலீசாரால் சுட்டு பிடிக்கப்பட்ட காமுகன் சிகிச்சைக்கு சென்னைக்கு அனுப்பி வைப்பு

கிருஷ்ணகிரி: கிருஷ்ணகிரி மலையின் மேல், பெண்ணை பாலியல் பலாத்காரம் செய்த விவகாரத்தில், போலீசாரால் சுட்டு பிடிக்கப்பட்டவர், மேல்சிகிச்சைக்காக, சென்னை ஸ்டான்லி மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டார்.


கிருஷ்ணகிரியில் கடந்த, 19 ல், புதிய பஸ் ஸ்டாண்ட் பின்புற-முள்ள மலை பகுதிக்கு சென்ற, 35 வயது பெண்ணை, 4 பேர் கொண்ட கும்பல் கத்திமுனையில் மிரட்டி, நகை, பணத்தை பிடுங்கியது. இதில் இருவர், அப்பெண்ணை பாலியல் பலாத்-காரம் செய்த நிலையில், 2 பேர் அதை மொபைலில் வீடியோ எடுத்தனர். இது தொடர்பாக, கிருஷ்ணகிரி டவுன் போலீசார் கடந்த, 20ல் கலையரசன், 21, அபிஷேக், 20, ஆகிய இருவரை கைது செய்தனர். அவர்கள், தர்மபுரி சிறையில் அடைக்கப்பட்டனர். நேற்று முன்தினம் கிருஷ்-ணகிரி அடுத்த பொன்மலைக்குட்டை பெருமாள் கோவில் பின்-புறம் பதுங்கி யிருந்த சுரேஷ், 23, என்பவரை, வலது காலில் சுட்டு, போலீசார் பிடித்தனர். போலீஸ் பிடியில் இருந்து தப்ப முயன்றபோது நாராயணன், 23, என்பவர் தவறி விழுந்து, அவரது இடது காலில் எலும்பு முறிவு ஏற்பட்டது. காயமடைந்த இரு-வரும், கிருஷ்ணகிரி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்-டனர். நாராயணனுக்கு மாவு கட்டு போடப்பட்ட நிலையில், சேலம் மத்திய சிறைக்கு அனுப்பப்பட்டார்.
முக்கிய குற்றவாளியான சுரேசின் வலது கால் முட்டியில் குண்டு பாய்ந்துள்ளதால்,
அவருக்கு ரத்தப் போக்கு நிற்கவில்லை. மேல்சிகிச்சைக்காக, நேற்று சென்னை ஸ்டான்லி மருத்துவ மனைக்கு அனுப்பி வைக்-கப்பட்டார். அவருக்கு காலில் ஆப்பரேஷன் நடக்கவுள்ளதாக போலீசார் தெரிவித்தனர்.
சுரேசின் மொபைலில், கல்லுாரி மாணவியர் உட்பட பல இளம்-பெண்களை மிரட்டி, பாலியல் பலாத்காரம் செய்த வீடியோ இருந்ததை போலீசார் கண்டறிந்தனர். கைதானவர்கள் மீது, ஏற்க-னவே கிருஷ்ணகிரி டவுன், தாலுகா ஸ்டேஷனில், 2 வழக்குகள் உள்ள நிலையில், தற்போதைய வழக்கில், மேலும் பாதிக்கப்-பட்ட சிலரை சேர்க்கவுள்ளதாகவும், போலீசாரை கத்தியால் தாக்-கிய சுரேஷ், நாராயணன் மீது கொலை முயற்சி வழக்கு பதிந்துள்-ளதாகவும் போலீசார் தெரிவித்தனர்.
பெண்ணை மிரட்டி, பாலியல் வன்கொடுமை செய்த விவகா-ரத்தில், குற்றவாளிகளை ஒரே நாளில் பிடித்து, நடவடிக்கை எடுத்த போலீசாருக்கு, மாவட்ட எஸ்.பி., தங்கதுரை பாராட்டு தெரிவித்தார்.

Advertisement