மக்கள் புகாரால் தனியார் கல்குவாரியில் கனிம வளத்துறை அதிகாரிகள் ஆய்வு
நல்லம்பள்ளி: நல்லம்பள்ளி அருகே, சாலையை சேதப்படுத்திய கல்குவாரி நிர்-வாகத்தை கண்டித்து, கிராம மக்கள் போராட்டத்தில் ஈடுபட்ட நிலையில், கனிம வளத்துறை அதிகாரிகள் அக்குவாரியில் நேற்று ஆய்வு மேற்கொண்டனர்.
தர்மபுரி மாவட்டம், நல்லம்பள்ளி அருகே, பூதனஹள்ளி கிரா-மத்தில், தனியார் கல்குவாரி செயல்படுகிறது. இங்கிருந்து, டிப்பர் லாரிகள் மூலம், கிராம சாலை வழியாக, ஜல்லி, எம்.சாண்ட், உளி கற்கள் கொண்டு செல்லப்படுகிறது.இதனால், பூதனஹள்ளி -- நல்லம்பள்ளி இடையேயான தார்ச்-சாலை ஆங்காங்கே குண்டும், குழியுமாக மாறி சேதமடைந்துள்-ளது. இதனால், ஆத்திரமடைந்த பூதனஹள்ளி மக்கள் கடந்த, 20 அன்று இரவு டிப்பர் லாரிகளை சிறைபிடித்து போராட்டத்தில் ஈடுபட்டனர். அதியமான்கோட்டை போலீசார் உரிய நடவடிக்கை எடுப்பதாக உறுதி அளித்தனர்.
அதை தொடர்ந்து, நேற்று தனியார் கல்குவாரியில், தர்மபுரி மாவட்ட கனிம வளத்துறை உதவி இயக்குனர் பன்னீர்செல்வம், உதவி புவியியலாளர் புவனமாணிக்கம், நல்லம்பள்ளி தாசில்தார் சிவக்குமார், ஆர்.ஐ., வெங்கடேஷ் ஆகியோர் ஆய்வு மேற்-கொண்டனர்.
இது குறித்து, கனிமவளத்துறை உதவி இயக்குனர் பன்னீர்-செல்வம் கூறுகையில், ''பொதுமக்கள் புகாரால், தனியார் கல்கு-வாரியில் ஆய்வு செய்தோம். இதில், அனுமதிக்கபட்ட அளவை விட, வரம்பு மீறியதாக தெரிகிறது. மேலும், அரசு புறம்போக்கு நிலத்தில், மண் மற்றும் கற்கள் வெட்டி எடுக்கப்பட்டிருப்பது குறித்து, அளவீடு செய்ய உள்ளோம். அதன் பின் அக்குவாரி மீதான நடவடிக்கை குறித்து, மாவட்ட கலெக்டருக்கு அறிக்கை சமர்பித்து நடவடிக்கை எடுக்கப்படும்,'' என்றார்.
மேலும்
-
கந்தர்வகோட்டையில் குடிநீர் விநியோகிப்பாளர் தலையில் கல்லைப் போட்டுக் கொலை .
-
பெண்கள் சக்தி நாட்டை வலுப்படுத்தும்; மன் கி பாத் நிகழ்ச்சியில் பிரதமர் மோடி பேச்சு
-
கல்லூரி மாணவிக்கு பாலியல் தொல்லை; விடுதி வாட்ச்மேன் கைது!
-
சென்னையில் மனநிலை பாதிக்கப்பட்ட நபர் அடித்துக்கொலை; போலீஸ் கண்முன்னே துயரம்!
-
பாட்டும் வயலினும்...: அற்புத 'அய்யர் சகோதரிகள்'
-
தர்மபுரி தி.மு.க., மாவட்ட செயலாளர் பதவி பறிப்பு