'முதலீட்டாளர்களுக்கு தி.மு.க., ஆட்சியில் மிகப்பெரிய வளர்ச்சி'

கிருஷ்ணகிரி: ''தி.மு.க., ஆட்சியில் அனைத்து தரப்பு முதலீட்டாளர்களுக்கும் மிகப்பெரிய வளர்ச்சி கிடைக்கும்,'' என, தமிழக தொழில்துறை அமைச்சர் ராஜா கூறினார்.
கிருஷ்ணகிரி மாவட்டம், குருபரப்பள்ளி டெல்டா நிறுவன அரங்கில், நிறுவனங்களின் செயல்பாடுகள், உற்பத்தி குறித்த ஆய்வு கூட்டம், தொழில்துறை அமைச்சர் ராஜா தலைமையில் நடந்தது. அதன் பின், அமைச்சர் ராஜா நிருபர்களிடம் கூறியதா-வது: பெங்களூருவுக்கு இணையாக, ஓசூரை வளர்ச்சி பாதைக்கு, தி.மு.க., அரசு, கொண்டு செல்கிறது. ஒரு சில முதலீடுகளுக்கு, 50 சதவீத முதலீடு சார்ந்த ஊக்கத்தொகையை, மத்திய அரசு வழங்குகிறது. அதனால் அதில், மத்திய அரசின் ஆதிக்கம் அதிக-மாக இருக்கிறது. இதனால் நமக்கு வரவேண்டிய சில முதலீ-டுகள், வேறு சில மாநிலங்களுக்கு கொண்டு செல்லப்பட்டது. மாநிலத்தின் பலத்திற்கு ஏற்றார் போல், முதலீடுகள் வர-வேண்டும். அப்போது தான் அந்த முதலீடுகள் முழுமை பெறும். அரசால், அனைத்து தரப்பு முதலீட்டாளர்களுக்கும் மிகப்பெரிய வளர்ச்சி கிடைக்கும். பல்வேறு
திட்டங்களுக்கு முடிந்தவரை விவசாய நிலங்கள் கையகப்படுத்து-வதை தவிர்க்கிறோம். சில இடங்களில் மட்டும் எடுக்கப்படும்
விவசாய நிலங்களுக்கு, இன்றைய விலையை விட, பன்மடங்கு அதிக விலை கொடுத்து எடுக்கிறோம்.
இவ்வாறு, அவர் கூறினார்.
மாவட்ட கலெக்டர் தினேஷ்குமார், கிருஷ்ணகிரி, காங்., - எம்.பி., கோபிநாத். எம்.எல்.ஏ.,க்கள் பர்கூர் மதியழகன், ஓசூர் பிரகாஷ், தளி ராமச்சந்திரன், கூடுதல் தலைமை செயலர் மற்றும் தமிழ்நாடு தொழில் முதலீட்டு கழக மேலாண்மை இயக்குனர் சாய்குமார், தொழில்துறை செயலாளர் அருண்ராய், சிப்காட் மேலாண்மை இயக்குனர் செந்தில்ராஜ், டி.ஆர்.ஓ., (சிப்காட்) பழ-னிதேவி மற்றும் சிப்காட் துறை அலுவலர்கள் உடனிருந்தனர்.

Advertisement