இயற்கை விவசாயம் கற்க வந்துள்ள பிரான்ஸ் வாலிபர்
அரவக்குறிச்சி: விவசாய பொருட்களை, மதிப்பு கூட்டு பொருளாக மாற்றி விற்-பனை செய்து வரும், பள்ளப்பட்டியை சேர்ந்த கிராமத்து பெண்-ணிடம், விவசாய பணிகளை மேற்கொள்வதற்காக, பிரான்ஸ் நாட்டை சேர்ந்த வாலிபர் பயிற்சி எடுத்து வருகிறார்.
கரூர் மாவட்டம், பள்ளப்பட்டி அருகே லிங்கமநாயக்கன்பட்டி கிராமத்தை சேர்ந்தவர் சரோஜா, 57. இவர், நம்மாழ்வாரின் வழியில் இயற்கை விவசாயம் செய்து வருகிறார். மேலும், தான் உற்பத்தி செய்த பொருட்களை, மதிப்பு கூட்டி சந்தைப் படுத்தி விற்பனை செய்து வருகிறார். அரவக்குறிச்சி சுற்று வட்டார பகுதி வறட்சியான பகுதி. முருங்கை சாகுபடி அதிகளவில் செய்யப்-பட்டு வருகிறது. ஆனால் இவர், நமக்கு தேவையான பழங்களை நாமே உற்பத்தி செய்யும், 'உணவு காடு' என்ற திட்டத்தில், 20 ஏக்கர் பரப்பளவில் நெல்லி, கடுக்கான், விலா, அத்தி, நாவல், இலுப்பை, கொய்யா, சப்போட்டா, மாதுளை உள்ளிட்டவற்றை சாகுபடி செய்து வரு-கிறார்.
உணவு காடு, உழவில்லாத வேளாண்மை என்பதை மையப்ப-டுத்தி, பொருளாதார ரீதியாக லாபம் ஈட்டி வருகிறார். உற்பத்தி செய்யப்படும் பொருட்களை, மதிப்பு கூட்டி தமிழகத்தின் பல்-வேறு பகுதிகளுக்கு விற்பனைக்கு அனுப்பி வருகிறார். முருங்கை-யிலிருந்து எண்ணெய், தேங்காயிலிருந்து சோப்பு என பல்வேறு பொருட்களை உற்பத்தி செய்து, சந்தைப்படுத்துதல் குறித்த பயிற்-சியை விவசாயிகளுக்கு வழங்கி வருகிறார். இயற்கை விவசா-யத்தை சிறப்பான முறையில் செய்வதால், இவருக்கு பல்வேறு அமைப்பின் சார்பில் விருதுகள் வழங்கப்பட்டுள்ளன.
இந்நிலையில், பிரான்ஸ் நாட்டை சேர்ந்த நாடக கலைஞராக உள்ள ஹென்றி அலெக்சாண்டர், 27, ஐரோப்பிய நாடுகளில் உள்ள பள்ளி, கல்லுாரி மாணவர்கள் இடையே விவசாயம் குறித்து நாடகங்கள் மூலம் விழிப்புணர்வு ஏற்படுத்தி வருகிறார். இவர், இந்தியா முழுவதும் சுற்றுப்பயணம் மேற்கொண்டு வரு-கிறார். சமூக வலைதளங்களில், சரோஜாவின் இயற்கை விவ-சாயம் தொடர்பான விபரங்களை பார்த்து ஆர்வமடைந்த ெஹன்றி அலெக்சாண்டர், லிங்கமநாயக்கன்பட்டிக்கு வந்தார். அங்கு விவசாயம் செய்து வரும் சரோஜாவை நேரில் பார்த்து, இயற்கை விவசாயம் தொடர்பான விபரங்களை கேட்டறிந்தார். பின், எப்படிப்பட்ட முறையில் இயற்கை விவசாயம் செய்வது என்பது குறித்து, ஏழு நாள் அங்கேயே தங்கி பயிற்சி பெற்று வரு-கிறார்.
இது குறித்து ஹென்றி அலெக்சாண்டர் கூறியதாவது: பிரான்ஸ் நாட்டின் பல்வேறு பகுதிகளில் பள்ளி மற்றும் கல்லூரி மாண-வர்கள் இடையே நாடகங்கள் மூலம் விழிப்புணர்வை ஏற்படுத்தி வருகிறேன். யூ டியூப் மூலம் இந்திய விவசாயம் குறித்து தெரிந்து கொண்டேன். இந்தியா முழுவதும் சுற்றுப்பயணம் மேற்கொள்ள பிரான்ஸ் நாட்டில் இருந்து புறப்பட்டு கடந்த மாதம் இந்தியா வந்தடைந்த பிறகு, கேரளா சென்று விவசாயம் கற்றுக் கொண்டேன். அதேபோல அரவக்குறிச்சி அருகே உள்ள லிங்கம-நாயக்கன்பட்டி பகுதியில் விவசாயம் செய்து வரும் சரோஜா குறித்தும் யூ டியூபில் தெரிந்து கொண்டேன்.
அவரை நேரில் பார்த்து இயற்கை விவசாயம் குறித்து பயிற்சி பெற இங்கு வந்துள்ளேன். இப்பயிற்சியை முடித்த பிறகு கேர-ளாவில் மீண்டும் விவசாயம் குறித்த ஒரு நிகழ்ச்சியில் கலந்து கொள்ள செல்கிறேன். இந்தியாவில் கற்றுக்கொண்ட அனைத்-தையும் பிரான்ஸ் நாட்டிற்கு சென்று அங்கு இயற்கை முறையில் விவசாயம் செய்ய உள்ளேன்.
இவ்வாறு தெரிவித்தார்.
மேலும்
-
பெண்கள் சக்தி நாட்டை வலுப்படுத்தும்; மன் கி பாத் நிகழ்ச்சியில் பிரதமர் மோடி பேச்சு
-
கல்லூரி மாணவிக்கு பாலியல் தொல்லை; விடுதி வாட்ச்மேன் கைது!
-
சென்னையில் மனநிலை பாதிக்கப்பட்ட நபர் அடித்துக்கொலை; போலீஸ் கண்முன்னே துயரம்!
-
பாட்டும் வயலினும்...: அற்புத 'அய்யர் சகோதரிகள்'
-
தர்மபுரி தி.மு.க., மாவட்ட செயலாளர் பதவி பறிப்பு
-
போப் உடல்நிலை கவலைக்கிடம்: வாடிகன் தகவல்