விமானத்தில் பாம்புகள், பல்லிகள் கடத்தல்; பயணியை தட்டி தூக்கிய சுங்கத்துறை!

2


சென்னை: டில்லி விமான நிலையத்தில், பயணி ஒருவர் சட்ட விரோதமாக கடத்தி வந்த பாம்புகள், பல்லிகளை சுங்கத்துறை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர். அந்த பயணியிடம் விசாரணை நடத்தி வருகின்றனர்.


டில்லி இந்திரா காந்தி சர்வதேச விமான நிலைத்தில் அயல்நாட்டு விலங்குகள் சட்டவிரோதமாக கடத்தப்படுவதாக சுங்கத்துறை அதிகாரிகளுக்கு தகவல் கிடைத்தது. அதன் படி, தாய்லாந்து நாட்டின் பாங்காக் நகரில் இருந்து டில்லி வந்த விமானத்தில் பயணிகள் மூன்று பேரை தடுத்து நிறுத்தி அவர்களின் உடைமைகளை சோதனை நடத்தினர்.

அப்போது பயணி ஒருவர் சட்ட விரோதமாக, வெவ்வேறு வகை பாம்புகள் 22, வெவ்வேறு வகை பல்லிகள் 23, மரவட்டைகள் 14, சிலந்தி 1 ஆகியவற்றை கடத்தி வந்தது கண்டுபிடிக்கப்பட்டது. பின்னர் பாம்புகள், பல்லிகளை பறிமுதல் செய்த அதிகாரிகள் பயணியிடம் விசாரணை நடத்தி வருகின்றனர்.



இது தொடர்பான புகைப்படத்தை டில்லி சுங்கத்துறை அதிகாரிகள் சமூக வலைதளத்தில் பகிர்ந்து, 'வன விலங்குகள் கடத்தலை தடுக்கவும், பாதுகாக்கவும் சுங்கத்துறை விழிப்புடன் செயல்படுகிறது' என குறிப்பிட்டுள்ளனர்.

Advertisement