ரயில் நிலையங்களில் அத்துமீறல்; தி.மு.க.,வினர் மீது வழக்கு

84


பொள்ளாச்சி: பொள்ளாச்சி, பாளையங்கோட்டை ரயில் நிலையங்களில் ஹிந்தி எழுத்துக்களை அழித்த தி.மு.க.,வினர் மீது ரயில்வே தரப்பில் போலீசில் புகார் அளிக்கப்பட்டு உள்ளது.

மும்மொழிக் கொள்கைக்கு எதிர்ப்பு தெரிவிப்பதாக கூறி, ஹிந்தி மொழிக்கு எதிராக தி.மு.க.,வினர் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். ஹிந்தி திணிக்கப்படாது என்று மத்திய அரசு திரும்பத் திரும்ப உறுதி கூறிய நிலையிலும், இந்த போராட்டம் நடக்கிறது.



இன்று பொள்ளாச்சி, பாளையங்கோட்டை ரயில் நிலையங்களில், இருந்த ஊர் பெயர் பலகையில் ஹிந்தி எழுத்துக்களை மை வைத்து தி.மு.க.,வினர் அழித்தனர். சம்பவ இடத்திற்கு வந்து ரயில்வே துறை அதிகாரிகள் எச்சரித்தும், தி.மு.க.,வினர் கேட்காமல் மை மூலம் எழுதுக்களை அழித்தனர்.

இதையடுத்து பொள்ளாச்சி ரயில் நிலைய அதிகாரிகள் சார்பில் தி.மு.க.,வினர் 4 பேர் மீது போலீசில் புகார் அளிக்கப்பட்டது. 3 பிரிவுகளில் வழக்கும் பதியப்பட்டுள்ளது. பெயர் பலகை மீண்டும் பழைய நிலைக்கு சரி செய்யப்பட்டுள்ளதாகவும், ரயில்வே நிர்வாகம் அறிவித்துள்ளது. இதேபோல, பாளையங்கோட்டை ரயில் நிலையம் சார்பிலும் போலீசில் புகார் அளிக்கப்பட்டுள்ளது.

Advertisement