அரசு ஊழியர் சங்கங்களின் கோரிக்கை என்ன? நாளை கேட்கிறது அமைச்சர்கள் குழு

7


சென்னை: அரசு ஊழியர் சங்கங்களின் கோரிக்கை குறித்து, நாளை (பிப்.,24) அமைச்சர்கள் குழு ஆலோசனை நடத்த உள்ளது.

தமிழ்நாடு அரசு ஊழியர்கள் சங்கம் 2021ம் ஆண்டு சட்டசபை தேர்தல் வாக்குறுதிகளை நிறைவேற்றவில்லை என குற்றம்சாட்டி வருகிறது. அரசு ஊழியர்களின் கோரிக்கைகளை உடனடியாக நிறை வேற்றவில்லை என்றால், போராட்டத்தில் ஈடுபடுவோம் என தெரிவித்துள்ளது.


இந்நிலையில் அரசு அலுவலர் சங்கங்களின் கோரிக்கையை பரிசீலித்து அவற்றின் மீது உரிய முடிவுகளை காணும் பொருட்டு, அமைச்சர்கள் அடங்கிய குழுவை அமைத்து முதல்வர் ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார்.


இந்த குழுவில் பொதுப்பணித்துறை அமைச்சர் வேலு, நிதி அமைச்சர் தங்கம் தென்னரசு, பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் மகேஷ், மனித வள மேலாண் துறை அமைச்சர் கயல்விழி செல்வராஜ் இடம் பெற்றுள்ளனர்.


அரசு ஊழியர் சங்கங்களின் கோரிக்கை குறித்து சங்க நிர்வாகிகளுடன் நாளை 24ம் தேதி தலைமை செயலகத்தில் அமைச்சர்கள் பேச்சு நடத்த உள்ளனர். கூட்டத்தின் முடிவில் முக்கிய முடிவுகள் எடுக்கப்பட வாய்ப்புள்ளது.

Advertisement