ஆம் ஆத்மியில் இணைந்த பிரபல நடிகை!

சண்டிகர்; பிரபல பஞ்சாப் நடிகை சோனியா மன், அர்விந்த் கெஜ்ரிவால் முன்னிலையில் ஆம் ஆத்மியில் இணைந்தார்.
புதுடில்லி சட்டசபை தேர்தலில் அர்விந்த் கெஜ்ரிவாலின் ஆம் ஆத்மி தோல்வி அடைந்து ஆட்சியை பறிகொடுத்தது. இதையடுத்து, தலைநகர் டில்லி அரசியலில் இருந்து அண்டை மாநிலமான பஞ்சாப் நோக்கி கவனத்தை திருப்பி இருக்கிறார் கெஜ்ரிவால். அந்த மாநிலத்தில் ஆம் ஆத்மி ஆளும் கட்சி என்பதே இதற்கு காரணம்.
இந் நிலையில் பஞ்சாப் மாநிலத்தின் பிரபல நடிகை சோனியா மன், ஆம் ஆத்மியில் இணைந்துள்ளார். அக்கட்சியின் ஒருங்கிணைப்பாளர் அர்விந்த் கெஜ்ரிவால் முன்னிலையில் தம்மை அவர் இணைத்துக் கொண்டார்.
இதுகுறித்து பதிவை ஆம் ஆத்மியின் பஞ்சாப் பிரிவு தமது சமூக வலைதளத்தில் வெளியிட்டுள்ளது. ஆம் ஆத்மி குடும்பத்துக்கு வரவேற்பதாகவும் குறிப்பிட்டுள்ளது.
பஞ்சாபி நடிகையான சோனியா மன், மற்ற மொழிகளிலும் நடித்துள்ளார். குறிப்பாக மலையாளம், ஹிந்தி, தெலுங்கு, மராத்தி மொழி திரைப்படங்களில் நடித்து இருக்கிறார். இவரது தந்தை பெயர் பல்தேவ் சிங். இவர் விவசாயிகள் சங்கத்தின் முக்கிய தலைவராக விளங்கியவர். 1980களில் காலிஸ்தான் தீவிரவாதிகளால் சுட்டுக் கொல்லப்பட்டவர்.
