இந்தியா - பாகிஸ்தான் கிரிக்கெட் போட்டி: ஐ.ஐ.டி. பாபா ஆரூடம்

5

புதுடில்லி: பாகிஸ்தானுக்கு எதிரான கிரிக்கெட் போட்டியில் இந்தியா தோற்கும் என்று பிரபல சாமியாரான ஐ.ஐ.டி. பாபா ஆரூடம் கூறி உள்ளார்.



சாமியார்களில் பல ரகம் உண்டு. அவர்களில் பிரபலமானவராக அறியப்படுபவர் ஐ.ஐ.டி. பாபா. சர்ச்சையான விஷயங்களை பேசுவதால் சமூக வலைதளங்களில் இவரின் பேச்சுகள், நடவடிக்கைகள் பிரபலம். மகா கும்பமேளாவில் பங்கேற்றதன் மூலம் ஏகமாக பிரபலமாகி இருக்கிறார் ஐ.ஐ.டி. பாபா.


இவர் தற்போது புதிய ஆரூடம் ஒன்றை கூறி இருக்கிறார். துபாயில் இன்றைய (பிப்.23) இந்தியா, பாகிஸ்தான் அணிகளுக்கு இடையேயான ஐ.சி.சி. சாம்பியன்ஸ் டிராபி கிரிக்கெட் போட்டியில் இந்தியா தோற்கும் என்று கூறி இருக்கிறார்.


இந்த போட்டியில் விராட் கோலி உள்ளிட்ட எந்த முக்கிய வீரரும் எடுக்கும் முயற்சிக்கும் பலனில்லை என்று தெரிவித்துள்ளார். அவரது வீடியோ வைரலாகி உள்ள நிலையில், ஆரூடத்தை கண்டு பலரும் கண்டித்து விமர்சனம் செய்து வருகின்றனர்.


ஐ.ஐ.டி. பாபாவின் உண்மையான பெயர் அபே சிங். ஐ.ஐ.டி., மும்பையில் படித்தவர். கனடாவில் உயர்ந்த பணியில் இருந்தவர், ஆன்மிகத்தின் மீதான ஈர்ப்பு காரணமாக சாமியாராக மாறியவர்.

Advertisement