ஹிஸ்புல்லா தலைவரின் இறுதிச்சடங்கு: போர் விமானங்களை பறக்கவிட்டு எச்சரித்த இஸ்ரேல்

1

பெய்ரூட்: இஸ்ரேலிய தாக்குதலில் கொல்லப்பட்ட ஹிஸ்புல்லா தலைவர் ஹசன் நஸ்ரல்லாவின் இறுதிச்சடங்கு பெய்ரூட் புறநகர்ப் பகுதியில் இன்று நடந்தது.


கடந்த ஆண்டு இஸ்ரேல் ராணுவம் நடத்திய அதிரடி தாக்குதலில் ஹிஸ்புல்லா தலைவர் ஹசன் நஸ்ரல்லா கொல்லப்பட்டார். இந்தப் போரில் அந்த அமைப்பின் பெரும்பாலான தலைவர்கள் மற்றும் ஆயிரக்கணக்கான போராளிகள் கொல்லப்பட்டனர்.

இந்நிலையில், ஹசன் நஸ்ரல்லாவின் இறுதிச் சடங்கு பெய்ரூட் புறநகரில் இன்று நடத்தப்பட்டது. இதில் ஆயிரக்கணக்கானோர் கலந்து கொண்டனர். இறுதிச்சடங்கு நடந்த பகுதியில், இஸ்ரேல் போர் விமானங்கள் வட்டமிட்டன.
இது குறித்து இஸ்ரேல் ராணுவம் எக்ஸ் தளத்தில் பதிவில், ''இன்று ஹசன் நஸ்ரல்லாவின் இறுதிச் சடங்கு. இன்று உலகம் ஒரு சிறந்த இடம்" என்று தெரிவித்துள்ளது.

Advertisement