மீனவர்கள் கைது விவகாரம்; மத்திய அரசுக்கு முதல்வர் கடிதம்

சென்னை: இலங்கை கடற்படையினால் கைது செய்யப்பட்ட மீனவர்களை விடுவிக்க நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி மத்திய அமைச்சர் ஜெய்சங்கருக்கு முதல்வர் ஸ்டாலின் கடிதம் எழுதினார்.
இது தொடர்பாக அவர் எழுதிய கடிதத்தில் கூறியிருப்பதாவது: கடந்த 22ம் தேதி ராமேஸ்வரம் மீன்பிடி துறைமுகத்தில் இருந்து மீன்பிடிக்கச் சென்ற 32 மீனவர்களையும், அவர்களது 5 மீன்பிடி விசைப்படகுகளையும் இலங்கை கடற்படையினர் கைது செய்துள்ளனர்.
தமிழக மீனவர்கள் கைது செய்யப்படுவதைத் தடுக்க இலங்கை அரசை வலியுறுத்த வேண்டும். இந்த ஆண்டில் மட்டும் 119 மீனவர் கைது செய்யப்பட்டுள்ளனர். 16 படகுகளும் சிறைபிடிக்கப்பட்டுள்ளன.
நீண்ட காலமான நிலுவையில் இருக்கும் இந்தப் பிரச்னைக்குக்கு நிரந்தர தீர்வு காண கூட்டு பணிக்குழுவை உடனடியாக கூட்ட வேண்டும், இவ்வாறு அவர் குறிப்பிட்டுள்ளார்.
வாசகர் கருத்து (1)
Ramesh Sargam - Back in Bengaluru, India.,இந்தியா
23 பிப்,2025 - 21:12 Report Abuse

0
0
Reply
மேலும்
Advertisement
Advertisement