டாஸ்மாக் கடையை மாற்றுங்க மக்கள் கோரிக்கை
சூலுார்;
சூலுார் பேரூராட்சிக்கு உட்பட்ட திருச்செந்தூர் முருகன் நகர், திருமகள் நகர் மற்றும் பகத்சிங் நகர் பகுதியில், கடந்த சில நாட்களுக்கு முன் டாஸ்மாக் கடை திறக்கப்பட்டது. இந்நிலையில், இந்து முன்னணி, அ.தி.மு.க., பா.ஜ., உள்ளிட்ட கட்சிகளின் நிர்வாகிகள், டாஸ்மாக் கடையை அகற்ற கோரி, பேரூராட்சி நிர்வாகத்திடம் மனு அளித்தனர்.
வரும், 27ம் தேதி முற்றுகை போராட்டம் நடத்துவதாக அறிவித்தனர். இந்நிலையில், நேற்று முன்தினம் மாலை, சூலுார் வந்த மின் துறை அமைச்சர் செந்தில் பாலாஜி, கலெக்டர் பவன் குமார் ஆகியோரை சந்தித்த அப்பகுதி மக்கள், 'தங்கள் பகுதியில் திறக்கப்பட்ட, டாஸ்மாக் கடையை அகற்ற வேண்டும்,' என, கோரிக்கை விடுத்தனர். இதையடுத்து, கடையை வேறு இடத்துக்கு மாற்ற அமைச்சர் உறுதி அளித்தார்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
மேலும்
-
கைவினை பொருட்கள் கண்காட்சி நிறைவு
-
பள்ளிக்கல்விக்கு தி.மு.க., வாக்குறுதிகள் அளித்தது 24; நிறைவேற்றியது 7 மட்டுமே: வெள்ளை அறிக்கை வெளியிடுவாரா முதல்வர்
-
உதவி சப் இன்ஸ்பெக்டர் சாவு
-
கெங்கராம்பாளையம் டோல்கேட் இன்று திறப்பு
-
தேங்காய்த்திட்டு வாய்க்கால் ரூ. 3.76 கோடியில் துார்வாரும் பணி
-
புறக்கணிப்பதாக புலம்பும் மேலவாசல் மக்கள்
Advertisement
Advertisement