ரூ.23,710 கோடி பங்குகளை விற்ற அன்னிய முதலீட்டாளர்கள்

புதுடில்லி:இம்மாதம் 21ம் தேதி வரையிலான காலகட்டத்தில், அன்னிய பங்கு முதலீட்டாளர்கள், 23,710 கோடி ரூபாய் மதிப்பிலான பங்குகளை விற்று தங்கள் முதலீட்டை திரும்ப பெற்றுள்ளதாக தரவுகள் தெரிவிக்கின்றன.
இதையடுத்து 2025ல் அன்னிய பங்கு முதலீட்டாளர்களின் பங்கு விற்பனை 1 லட்சம் கோடி ரூபாயாக உயர்ந்துஉள்ளது.
அன்னிய பங்கு முதலீட்டாளர்கள் இம்மாதம் 21ம் தேதி வரையிலான காலகட்டத்தில், பங்கு சந்தைகளில் தாங்கள் செய்திருந்த முதலீடுகளில் இருந்து 23,710 கோடி ரூபாய்க்கும் மேல் மதிப்புள்ள பங்குகளை விற்று தங்கள் முதலீட்டை திரும்ப பெற்றுள்ளனர். கடந்த ஜனவரியில் 78,027 கோடி ரூபாயை நிகர வெளியேற்றத்தைத் தொடர்ந்து தற்போது இந்த வெளியேற்றம் நிகழ்ந்து உள்ளது-.
இதையடுத்து, அதிகரித்து வரும் உலகளாவிய பதற்றங்களுக்கு மத்தியில், நடப்பாண்டில் அன்னிய பங்கு முதலீட்டாளர்கள் திரும்ப பெற்ற மொத்த முதலீட்டுத் தொகை 1.02 லட்சம் கோடி ரூபாயை கடந்துள்ளதாக தரவுகள் தெரிவிக்கின்றன.