கும்பமேளா புனித நீரை வழங்கியது தாம்பிராஸ்

கோவை; தம்பிராஸ் டாட்டாபாத் கிளை சார்பில் உ.பி.மாநிலம் பிரயாக்ராஜில் நடைபெற்ற மஹா கும்பமேளாவிலிருந்து எடுத்துவரப்பட்ட புனித தீர்த்தம் பாட்டில்களில் அடைக்கப்பட்டு அனைவருக்கும் வழங்கப்பட்டது.
மஹாகும்ப மேளாவில் பங்கேற்க முடியாதவர்கள், வயோதிகர்கள், பெண்கள் ஆகியோரின் கோரிக்கைகளை நிறைவேற்றும் வகையில் தாம்பிராஸ் டாட்டாபாத் கிளை சார்பில், உ.பி.மாநிலம் பிரயாக்ராஜிலிருந்து கொண்டுவரப்பட்ட புனித கும்பமேளா தீர்த்தம் பாட்டில்களில் அடைக்கப்பட்டு அனைவருக்கும் வழங்கப்பட்டது.
டாட்டாபாத் சுப்பராயன் வீதியிலுள்ள, சவுபாக்கிய விநாயகர் கோவில் வீதியில் நேற்று மாலை 4:00 மணிக்கு நடந்த நிகழ்ச்சியில், தாம்பிராஸ் செயலாளர் ரவி,ஆலோசகர் ரமா வெங்கட் ஆகியோர் முன்னிலையில் ஆடிட்டர் வெங்கடேஷ் வழங்கினார். ஏராளமானோர் பெற்றுக்கொண்டனர்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
மேலும்
Advertisement
Advertisement