இரட்டிப்பு பணம் தருவதாக சேலத்தில் மோசடி நிறுவன இயக்குனர்கள் கைது - ரூ.3 கோடி பறிமுதல்
சேலம்: சேலத்தில் பணம் இரட்டிப்பாக தருவதாக கூறி, முதலீடு பெற்று மோசடி செய்த நிறுவனத்தில், போலீசார் சோதனை நடத்தி, 3 கோடி ரூபாய், பல்வேறு ஆவணங்களை பறிமுதல் செய்தனர். அதன் இயக்குனர்கள் உள்பட, 14 பேரை கைது செய்-தனர்.
திருவண்ணாமலையை சேர்ந்தவர் ராஜேஷ், 35; கள்ளக்குறிச்சி மாவட்டத்தை சேர்ந்தவர் சத்யபாமா, 25; இருவரும் சேலம், ஸ்வர்ணபுரி, அய்யர் தெருவில், இரு ஆண்டுக்கு முன், 'ரீ கிரியேட் பியூச்சர் இந்தியா' பெயரில் வீட்டு உபயோக பொருள் விற்பனை நிறுவனத்தை தொடங்கினர். நிறுவனத்தில், 50,000, 1 லட்சம், 2 லட்சம் ரூபாய் முதலீடு செய்தால், அதற்கேற்ப குறிப்பிட்ட மாதத்தில் பணம் இரட்டிப்பாக தருவதாக அறிவித்-தனர். அதை நம்பி, 200க்கும் மேற்பட்டோர் லட்சக்கணக்கில் முதலீடு செய்தனர்.நேற்று முன்தினம் மாலை, நிறுவனம் காலி செய்யப்படுவதாக தகவல் கிடைக்க, முதலீட்டாளர்கள்முற்றுகையிட்டனர்.
மாநகர போலீஸ் துணை கமிஷனர்கள் வேல்முருகன், கீதா உள்-ளிட்ட அதிகாரிகள், பள்ளப்பட்டி போலீசார் சென்று விசாரித்-தனர். அதில் கோடிக்கணக்கில் முதலீடு பெறப்பட்டதும், அதற்கு ஏஜன்டாக, 70 பேர் செயல்பட்டதும் தெரிந்தது.
ராஜேஷ், சத்யபாமா, அவரது கணவரான, எம்.ராஜேஷ், 30, ஹரிபாஸ்கர் ஆகியோரை, ஸ்டேஷனுக்கு அழைத்துச்செல்ல போலீசார் முயன்றனர். நிறுவன ஏஜன்டுகள் திரண்டு எதிர்ப்பு தெரிவித்தனர்.
இதனால் போலீசாரை பணிபுரிய விடாமல் தடுத்து கொலை மிரட்டல் விடுத்ததாக, சேலம், வெள்ளாளப்பட்டி ராஜேந்திரன், 42, வேம்படிதாளம் குமார், 50, காளிப்பட்டி பழனிவேல், 45, தளவாய்பட்டி கோபாலகிருஷ்ணன், 37, மகாதேவன், 34, நெத்தி-மேடு பிரபு, 29, கோட்டகவுண்டம்பட்டி ராஜேஸ்வரி, 39, அஸ்-தம்பட்டி ராணி, 35, மூன்று ரோடு கலா, 40, இளம்பிள்ளை கலைவாணி, 39, ஆகியோரை, போலீசார் கைது செய்-தனர்.தொடர்ந்து நிறுவனத்தில் சோதனை செய்து, 3 கோடி ரூபாய், 347 கிராம் தங்கம், 2,472 கிராம் வெள்ளி மற்றும் பல்-வேறு ஆவணங்களை பறிமுதல் செய்தனர். இயக்குனர்கள் ராஜேஷ், சத்யபாமா, எம்.ராஜேஷ், ஹரிபாஸ்கரை நேற்று கைது செய்தனர்.
இதுகுறித்து போலீசார் கூறுகையில், 'ஆயிரத்துக்கும் மேற்பட்-டோரிடம் கோடிக்கணக்கில் பணம் வசூலித்துள்ளதாக தெரிகி-றது. எங்கெங்கு பணம் வைத்துள்ளனர், என்ன செய்தார்கள் என, விசாரணை முடிவில் தெரிய வரும். நிறுவனத்துக்கு போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது' என்றனர்.
மேலும்
-
சிதம்பரத்தில் பிப்.26ல் நாட்டியாஞ்சலி துவக்கம்
-
பட்டப்பகலில் கிராமத்தில் புகுந்து கன்று குட்டியை கொன்ற யானை
-
3500 பணியிடங்கள் காலி கிராம செவிலியர்கள் அவதி
-
இந்தியாவுக்கு நிதி தேவையில்லை அமெரிக்க அதிபர் மீண்டும் பேச்சு
-
ஹிந்தி மட்டும் தான் தெரியுமாம்; திருச்சி விமான நிலையத்தில் 'அடாவடி'
-
முதல்வர் மருந்தகங்களில் 762 மருந்துகள் விற்க முடிவு