பருத்தி விவசாயிகள் கவலை

பேரையூர் : பேரையூர் பகுதிகளில் மானாவாரி பருத்தி சாகுபடியில் விளைச்சல் குறைந்துள்ளதால் விவசாயிகள் கவலை அடைந்துள்ளனர்.

பருவ மழையை எதிர்பார்த்து மானாவாரியில் பருத்தி விதைத்தனர்.

செடிகளின் வளர்ச்சியின் போது மழை இல்லாததால் வளர்ச்சி மற்றும் பூப் பிடித்தல் பாதித்தது. விவசாயிகள் கூறுகையில், ''விதை, உரம், மருந்து, களை எடுத்தது என பெருந்தொகை செலவு செய்துள்ளோம். கடன் வாங்கித்தான் பயிர் செய்தோம். மகசூல் மிகவும் குறைந்து போய்விட்டது. இதனால் நஷ்டம் ஏற்பட்டுள்ளது. பயிர் காப்பீடு செய்துள்ளோம். அரசு இழப்பீடு வழங்க வேண்டும்' என்றனர்.

Advertisement