சேதமான தரைப்பாலங்களால் தடுமாறும் மக்கள்...

சேதமான தரைப்பாலம் : திண்டுக்கல் ஏர்வாடி ராவுத்தர் சந்தில் சாக்கடை தரை பாலம் சேதம் அடைந்துள்ளது. இதனால் பல மாதங்களாகியும் சீரமைக்கப்படாமல் உள்ளதால் போக்குவரத்துக்கு சிரமம் ஏற்படுகிறது. சிலர் தடுமாறி கீழே விழுகின்றனர். பாலத்தை சீரமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.

-பிரபாகரன், திண்டுக்கல்.

--------குப்பையால் உருவாகும் சீர்கேடு : திண்டுக்கல் ரயில்வே ஸ்டேஷன் ரோட்டில் குப்பை மலைபோல் குவிந்துள்ளது. பல நாட்களாக அள்ளாமல் உள்ளதால் சுகாதாரக்கேடு ஏற்படுகிறது. பிளாஸ்டிக் கலந்த குப்பையால் பாதிப்பு ஏற்படுகிறது. குப்பையை அகற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும்.

-சின்னத்துரை, நாகல்நகர்.----------

பயன்பாடில்லாத குடிநீர் தொட்டி : நத்தம் தேத்தாம்பட்டியில் ரோட்டில் உள்ள குடிநீர் தொட்டி சேதமடைந்து பயன்படுத்த முடியாத நிலையில் உள்ளது. பரளிபுதுார் ஊராட்சி நிர்வாகம் குடிநீர் தொட்டியை மக்கள் பயன்பாட்டிற்கு கொண்டுவந்து குடிநீர் தேவையை பூர்த்தி செய்ய வேண்டும்.

-வெள்ளையம்மாள்,தேத்தாம்பட்டி.----------

மின்விளக்குகளால் பாதிப்பு : பழநி 12வது வார்டு ராஜாஜி ரோடு 1வது தெருவில் மின் விளக்கு இரவு நேரங்களில் எரியாததால் அப்பகுதியில் இருட்டில் மூழ்கியுள்ளது. இதனால் பொதுமக்கள் பாதிக்கப்படுகின்றனர். மின் விளக்கை சரி செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும்.

-வேல்முருகன், பழநி.----------

குடிநீர் தட்டுப்பாடு : வேடசந்துார் மாரம்பாடி எம்.ஜி.ஆர். நகர் கஸ்துாரி நகர் பகுதியில் உள்ள தெரு குழாய்களில் சீரான குடிநீர் விநியோகம் இல்லை. இதனால் பொதுமக்கள் அவதிப்பட்டு வருகின்றனர். இந்த பகுதியில் சீரான குடிநீர் விநியோகம் செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும்.

-அ.சந்திரசேகர், மாரம்பாடி.

---------தொற்று பரப்பும் கழிவுநீர் : தாண்டிக்குடி போஸ்ட் ஆபிஸ் செல்லும் ரோட்டில் சாக்கடை கழிவுநீர் மாத கணக்கில் செல்கிறது. இவ்வழியே பள்ளி மாணவர்கள், பொதுமக்கள் கடந்து செல்வதால் நோய் தொற்று அபாயம் உள்ளது. ஊராட்சி நடவடிக்கை எடுக்க வேண்டும்.

-பாலன், தாண்டிக்குடி.

--------அச்சுறுத்தும் மின்கம்பம் : பழநி பாலசமுத்திரம் பேரூராட்சி 13வது வார்டு பாலாறு டேம் மெயின் ரோடு கால்நடை மருத்துவமனை எதிராக உள்ள மின் கம்பம் மிகவும் சேதமடைந்துள்ளது. இதனால் விபத்து அபாயம் உள்ளது. புதிதாக மின்கம்பம் அமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.

-கருப்புச்சாமி, பாலசமுத்திரம்.

Advertisement