சீமை கருவேல மரங்களால் ஓடையாக மாறிய கூவம் ஆறு

அரண்வாயல்:கடம்பத்துார் ஒன்றியம், பேரம்பாக்கம் அடுத்த, கேசாவரம் அணைக்கட்டு பகுதியில் உருவாகும் கூவம் ஆறு, பேரம்பாக்கம், கொண்டஞ்சேரி, சத்தரை, அகரம், கடம்பத்துார், அதிகத்துார், மணவாள நகர், புட்லுார், அரண்வாயல் வழியாக, சென்னையில் நேப்பியர் பாலம் அருகே, கடலில் கலக்கிறது.

இதில், பேரம்பாக்கம், சத்தரை, அதிகத்துார், மணவாள நகர், புட்லுார், அரண்வாயல், புதுச்சத்திரம் உட்பட பல பகுதிகளில், கூவம் ஆற்றில், சீமை கருவேல மரங்கள் வளர்ந்து வளர்ந்து உள்ளன. இதனால், மழைக்காலங்களில் ஆற்றில் நீர் சேகரமாவதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது.

மேலும், கூவம் ஆற்றில் சீமை கருவேல மரங்கள் வளர்ந்திருப்பதை அகற்ற, நீர்வள ஆதாரத் துறையினர் எவ்வித நடவடிக்கையும் எடுக்கவில்லை என, விவசாயிகள் மற்றும் பகுதிவாசிகள் குற்றம் சாட்டுகின்றனர்.

எனவே, மாவட்ட நிர்வாகம் தலையிட்டு, கூவம் ஆற்றில் வளர்ந்துள்ள சீமை கருவேல மரங்களை அகற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும் என, விவசாயிகள் மற்றும் பகுதிவாசிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Advertisement