திருத்தணி ரயில் நிலையத்தில் ரேஷன் அரிசி பறிமுதல்

திருத்தணி:திருத்தணி ரயில் நிலையத்திலிருந்து, ஆந்திராவுக்கு ரயில் வாயிலாக, ரேஷன் அரிசி கடத்திச் செல்வதாக மாவட்ட நிர்வாகத்திற்கு தகவல் கிடைத்தது. இதையடுத்து, மாவட்ட வட்ட வழங்கல் அலுவலர் உத்தரவின்படி, பறக்கும் படை துணை தாசில்தார் சரவணன் மற்றும் வருவாய்த் துறை ஊழியர்கள் நேற்று, திருத்தணி ரயில் நிலையத்தில் சோதனை நடத்தினர்.

அப்போது, சென்னையில் இருந்து, திருத்தணி வழியாக திருப்பதிக்கு செல்லக்கூடிய விரைவு ரயிலில் கடத்திச் செல்வதற்காக முதல் நடைமேடையில் இருந்த, 20 கிலோ எடை கொண்ட, 50 மூட்டைகளில், 1,000 கிலோ ரேஷன் அரிசி இருந்ததை கண்டுபிடித்து பறிமுதல் செய்தனர்.

வருவாய் துறையினர் பறிமுதல் செய்த அரிசி மூட்டைகளை சரக்கு ஆட்டோ வாயிலாக திருத்தணி நுகர்பொருள் வாணிபக் கிடங்கில் ஒப்படைத்தனர்.

Advertisement