மாணவர்களுக்கு பாராட்டு

விருதுநகர் : சென்னையில் நடந்த மாநில போட்டியில் வென்ற விருதுநகர் மாவட்டத்தைச் சேர்ந்த அரசு மேல்நிலைப்பள்ளி மாணவர்கள் சந்தியா, சதீஷ்குமார் ஆகியோர் மலேசியாவில் நடக்கும் போட்டியில் பங்கேற்க சென்றனர்.

விருதுநகர் மாவட்டம் ஆவுடையாபுரம் அரசு மேல்நிலைப்பள்ளி 8ம் வகுப்பு மாணவி சந்தியா, அரசு பள்ளிகளுக்கு இடையேயான மாவட்ட அளவிலான தமிழ் இலக்கிய மன்றம் பேச்சுப்போட்டியில் வென்றார். அதே போல தைலாபுரம் அரசு மேல்நிலைப்பள்ளியில் 8ம் வகுப்பு மாணவர் சதீஷ்குமார், கலைத்திருவிழா போட்டியில் களிமண்ணால் சிற்பம் செய்து வென்றார்.

இவர்கள் இருவரும் சென்னையில் நடந்த மாநில போட்டியில் வெற்றி பெற்று மலேசியாவில் நடக்கும் போட்டிகளில் பங்கேற்க சென்றனர். இவர்கள் இருவரையும் முன்னதாக முதன்மை கல்வி அலுவலர் மதன் குமார் நேரில் அழைத்து பாராட்டினார்.

Advertisement