ஆர்.ஐ., வீட்டில் திருடிய பெண் கைது
விருதுநகர்: விருதுநகர் கருப்பசாமி நகரைச் சேர்ந்தவர் லட்சுமணன் 61. இவரின் மனைவி சாத்துாரில் வருவாய் ஆய்வாளராக (ஆர்.ஐ.,) பணிபுரிகிறார். இவர்கள் 2024 ஆக. 29ல் திருமண நிகழ்ச்சிக்கு செல்வதற்காக வீட்டின் பீரோவை திறந்து பார்த்த போது ரூ.1 லட்சம், 2.1 பவுன் தங்க நகைகள் திருடு போனது தெரிந்தது.
இது குறித்து வீட்டில் வேலை பார்த்த ரோசல்பட்டியைச் சேர்ந்த காயத்ரி 35, விசாரித்த போது திருடியதை ஒப்புக்கொண்டார். அதில் ரூ. 35 ஆயிரத்தை திருப்பி கொடுத்து மீதமுள்ள பணம், நகைகளை அடுத்தாண்டு பிப்ரவரிக்குள் தருவதாக தெரிவித்தவர் திரும்ப தரவில்லை. இதனால் லட்சுமணன் ஊரகப்போலீசில் புகார் அளித்தார். போலீசார் காயத்ரியை கைது செய்தனர்.
கிணற்றில் மூழ்கி வாலிபர் பலி
விருதுநகர்: விருதுநகர் அருகே ஆமத்துாரைச் சேர்ந்தவர் சுரேஷ்குமார் 19. இவர் நேற்று மதியம் அப்பகுதியில் திருமண மண்டபம் பின்னால் உள்ள கிணற்றில் குளிப்பதற்காக சென்றவர் நீரில் மூழ்கி பலியானார். ஆமத்துார் போலீசார் விசாரிக்கின்றனர்.
பட்டாசு திரி பதுக்கியவர் கைது
விருதுநகர்: செங்குன்றாபுரத்தைச் சேர்ந்தவர் பிரேம்குமார் 30. இவர் பட்டாசு தயாரிக்கப் பயன்படும் மிஷின் திரிகள் 5 கட்டு பதுக்கி வைத்திருந்தார். இவரை ஆமத்துார் போலீசார் கைது செய்தனர்.
மேலும்
-
ஆட்டோ வாடகை தராததால் பூ வியாபாரி அடித்துக்கொலை
-
தமிழகத்தில் மிதமான மழை பெய்ய வாய்ப்பு
-
தர்மபுரி தி.மு.க., - மா.செ., மாற்றம் தடங்கத்துக்கு தடங்கல் ஏற்பட்டது எப்படி?
-
சிறுமியை கர்ப்பமாக்கிய மத போதகருக்கு 'போக்சோ' மனைவி, மகனும் சிக்கினர்
-
பல்கலை மாணவி பாலியல் வழக்கில் கைதான ஞானசேகரன் அடகுவைத்த 100 சவரன் மீட்பு
-
டில்லி நெரிசல் பலிகள்: விழிக்குமா ரயில்வே துறை?