பைக் மீது அரசு பஸ் மோதி தந்தை, மகள் பரிதாப பலி

வேடசந்துார்: பைக் மீது அரசு பஸ் மோதியதில் தந்தை, மகள் இறந்தனர்; மகன் காயமடைந்தார்.

திண்டுக்கல் மாவட்டம், காளனம்பட்டியை சேர்ந்த டிரைவர் சந்தோஷ், 36. நேற்று காலை மகள் சாய் அஸ்மிதா, 6, மகன் சாய் அஸ்வின், 9, ஆகியோருடன் வேடசந்துாரிலிருந்து காளனம்பட்டி நோக்கி பைக்கில் சென்றார்.

காக்காதோப்பூர் பிரிவு அருகே வந்தபோது, திண்டுக்கல்லில் இருந்து கரூர் நோக்கிச் சென்ற அரசு பஸ், பைக் மீது மோதியது. இதில், பைக் 20 அடி துாரம் இழுத்து செல்லப்பட்டு, சந்தோஷ் சம்பவ இடத்திலேயே இறந்தார்.

தலையில் காயமடைந்த சாய் அஸ்மிதா, திண்டுக்கல் அரசு மருத்துவமனை செல்லும் வழியில் இறந்தார். காயமடைந்த சாய் அஸ்வின் சிகிச்சை பெறுகிறார். வேடசந்துார் போலீசார் விசாரிக்கின்றனர்.

Advertisement