இரட்டிப்பு பணம் மோசடி நிறுவன இயக்குநர்கள் கைது
சேலம்,: பணம் இரட்டிப்பாக தருவதாக முதலீடு பெற்று மோசடி செய்த, நிறுவன இயக்குநர்கள் உட்பட 14 பேரை, போலீசார் கைது செய்தனர்.
திருவண்ணாமலையை சேர்ந்தவர் ராஜேஷ், 35. கள்ளக்குறிச்சி மாவட்டத்தை சேர்ந்தவர் சத்யபாமா, 25; இருவரும் சேலம், ஸ்வர்ணபுரி, அய்யர் தெருவில், இரு ஆண்டுக்கு முன், 'ரீ கிரியேட் பியூச்சர் இந்தியா' என்ற பெயரில், வீட்டு உபயோக பொருள் விற்பனை நிறுவனத்தை துவங்கினர்.
நிறுவனத்தில், 50,000, 1 லட்சம், 2 லட்சம் ரூபாய் என முதலீடு செய்தால், அதற்கேற்ப குறிப்பிட்ட மாதத்தில் பணம் இரட்டிப்பாக தருவதாக அறிவித்தனர்.
அதை நம்பி, 200க்கும் மேற்பட்டோர் லட்சக்கணக்கில் முதலீடு செய்தனர். நேற்று முன்தினம் மாலை, நிறுவனம் காலி செய்யப்படுவதாக தகவல் கிடைக்க, முதலீட்டாளர்கள் நிறுவனத்தை முற்றுகையிட்டனர்.
மாநகர போலீஸ் துணை கமிஷனர்கள், பள்ளப்பட்டி போலீசார் விசாரித்தனர். அதில், கோடிக்கணக்கில் முதலீடு பெறப்பட்டதும், அதற்கு ஏஜன்டாக 70 பேர் செயல்பட்டதும் தெரிந்தது.
நிறுவன இயக்குநர்களை ஸ்டேஷனுக்கு அழைத்துச்செல்ல போலீசார் முற்பட்டபோது, ஏஜன்டுகள் திரண்டு எதிர்ப்பு தெரிவித்தனர்.
இதனால், போலீசாரை பணிபுரிய விடாமல் தடுத்து கொலை மிரட்டல் விடுத்ததாக, சேலம், வெள்ளாளப்பட்டி ராஜேந்திரன், 42, வேம்படிதாளம் குமார், 50, காளிப்பட்டி பழனிவேல், 45, உள்ளிட்ட 10 பேரை போலீசார் கைது செய்தனர்.
தொடர்ந்து, நிறுவனத்தில் சோதனை செய்து 2.50 கோடி ரூபாய், 2 சவரன் நகை, பல்வேறு ஆவணங்களை பறிமுதல் செய்தனர்.
இயக்குநர்கள் ராஜேஷ், சத்யபாமா, அவரது கணவர் எம்.ராஜேஷ், ஹரிபாஸ்கர் ஆகியோரை போலீசார் நேற்று கைது செய்து, தொடர்ந்து விசாரிக்கின்றனர்.
மேலும்
-
தமிழகம் உட்பட 3 மாநிலங்களில் மாவோயிஸ்ட் வேட்டை தீவிரம்
-
எதற்கெடுத்தாலும் வெள்ளை அறிக்கை கேட்பதா: தி.மு.க.,
-
விஜய் கட்சி ஆண்டு விழா: கியூ.ஆர்., குறியீடுடன் அனுமதி
-
கும்பமேளாவில் பிரேமலதா குடும்பத்துடன் பங்கேற்பு
-
தர்மபுரி தி.மு.க., - மா.செ., மாற்றம் தடங்கத்துக்கு தடங்கல் வந்தது எப்படி?
-
பணி நியமன ஆணை தாமதம் பன்னீர்செல்வம் கண்டனம்