வினாடி வினாவில் அரசு பள்ளி சாதனை

இடையகோட்டை : மாவட்ட அளவிலான வினாடி வினா போட்டியில் பங்கேற்ற இடையகோட்டை நேருஜி அரசு மேல்நிலைப்பள்ளி மாணவிகள் முதலிடத்தில் வெற்றி பெற்றனர். தமிழ்நாடு அரசு பள்ளி கல்வித்துறை சார்பில் இலக்கிய மன்ற செயல்பாடுகளில் நடந்த திண்டுக்கல் மாவட்ட அளவிலான வினாடி வினா போட்டியில் இடையகோட்டை நேருஜி அரசு மேல்நிலைப்பள்ளி மாணவிகள் குழு முதலிடம் பெற்று வெற்றி பெற்று மாநில அளவிலான போட்டிக்கு தகுதி பெற்றனர்.

வெற்றி பெற்ற மாணவிகளையும், பயிற்சி தந்த சமூக அறிவியல் ஆசிரியர் இளங்கோவையும் பள்ளி தலைமை ஆசிரியர் பொன்ராஜ், பெற்றோர் ஆசிரியர் கழக தலைவர் முகமது இஸ்மாயில் வாழ்த்தினர்.

Advertisement