ரூ.150 வழங்கி ஆசை காட்டி ரூ.5 லட்சம் மோசடி கேரளாவை சேர்ந்த 3 பேர் கைது

சேலம்: சேலம் மாவட்டம் இடைப்பாடி அடுத்த பக்கநாடு, மேட்டுத்தெ-ருவை சேர்ந்தவர் சதீஷ்குமார், 31. இவரது வாட்ஸாப் எண்-ணுக்கு, கடந்த டிசம்பரில், 3 பேர் அடுத்தடுத்து தொடர்பு கொண்டு பேசினர்.

அப்போது அவர்கள், சில குறிப்பிட்ட ஓட்டல் பெயர்களை கூறி, அதை, 'கூகுள் மேப்' மூலம் மதிப்பீடு செய்து, மதிப்பெண் வழங்கி, அதை, 'ஸ்கிரீன்ஷாட்' எடுத்து அனுப்பினால் பரிசுத்தொகை பெறலாம்' என கூறி, 'லிங்க்' அனுப்பினர். அதன்படி சதீஷ்குமார் மதிப்பீடு செய்து அனுப்பி-யதற்கு, ஆரம்பத்தில் தலா, 150 ரூபாய் பரிசுத்தொகையாக அனுப்பப்பட்டது. அதேபோல் நிறைய மதிப்பீடுகள் அனுப்பி, அதிக வருவாய் ஈட்டியபோது, ஒரு கட்டத்தில், இனி முதலீடு செலுத்தினால் மட்டும் பரிசுத்தொகை கிடைக்கும் என தகவல் வந்தது. அதை நம்பி அடுத்தடுத்து, மொத்தமாக, 5 லட்சம் ரூபாய் அனுப்பியுள்ளார். ஆனால் பரிசுத்தொகை வழங்குவது நிறுத்தப்பட்டது. பலமுறை தொடர்பு கொண்டும், 'லிங்க்' செயல்-படவில்லை. ஏமாந்து விட்டதை அறிந்த சதீஷ்குமார், சேலம் மாவட்ட சைபர் கிரைம் போலீசில் புகார் அளித்தார். போலீசார் விசாரணைக்கு பின், கேரள மாநிலம் கோழிக்கோட்டை சேர்ந்த அபிலாஷ், 42, வித்யேஷ், 35, விபின், 33, ஆகியோரை, நேற்று கைது செய்தனர். அவர்களிடமிருந்த, 3 மொபைல், சிம் கார்டு பறிமுதல் செய்யப்பட்டது.

Advertisement