தண்ணீர் தொட்டியில் மூழ்கி கூலித்தொழிலாளி பலி

வாழப்பாடி: வாழப்பாடி, செல்லியம்மன் நகரை சேர்ந்த, கூலித்தொழிலாளி பழனிசாமி, 43. அதே பகுதியில் உள்ள சரவணன் தோட்டம் அருகே, நேற்று மாலை, 4:00 மணிக்கு, நண்பர்களுடன் மது அருந்திக்கொண்டிருந்தார். அப்போது பழனிசாமி, அதே பகு-தியில் உள்ள தண்ணீர் தொட்டியில் மூழ்கியதாக, நண்பர்கள் கூச்ச-லிட்டனர்.

மக்கள் தகவல்படி, வாழப்பாடி தீயணைப்பு துறை-யினர், 3 நிமிடத்தில் விரைந்து வந்து, பழனிசாமி உடலை, தண்ணீர் தொட்டியில் இருந்து சடலமாக மீட்டனர். வாழப்பாடி போலீசார், உடலை கைப்பற்றி விசாரிக்கின்றனர். இறந்த பழனி-சாமிக்கு, மனைவி, இரு குழந்தைகள் உள்ளனர்.

Advertisement