சிறுமி கடத்தல்: வாலிபர் கைது

வேடசந்துார் : உலகம்பட்டியை சேர்ந்த கறிக்கடை நடத்துபவர் அஜித் அமலஜீவன் 29. இவர் அதே பகுதியை சேர்ந்த 15 வயது சிறுமியை காதலித்தார்.

சிறுமியை 2 ஆண்டுகளுக்கு முன்பு ஆசை வார்த்தை கூறி கடத்தி சென்றார். சிறுமியின் தந்தை வேடசந்துார் போலீசில் புகாரளிக்க சிறுமியை மீட்டு பெற்றோரிடம் ஒப்படைத்த போலீசார், இளைஞரை போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்தனர்.

ஜாமீனில் வெளிவந்த அஜித் அமலஜீவன், சிறுமி 2மாதங்களுக்கு முன் மீண்டும் கடத்தினார். ஏற்கனவே திண்டுக்கல் மகிளா நீதிமன்றத்தில் நடந்தவழக்கில், ஆஜராகாத இளைஞருக்கு நீதிமன்றம் பிடிவாரண்ட் பிறப்பிக்கப்பட்ட நிலையில் அஜித் அமலஜீவன், சிறுமியுடன் கொடைக்கானல் மலைப்பகுதியில் இருப்பது தெரிந்தது. வேடசந்துார் இன்ஸ்பெக்டர் வேலாயுதம், வாலிபர் அஜித் அமலஜீவனை,கைது செய்து சிறையில் அடைத்தனர். சிறுமி திண்டுக்கல் காப்பகத்திற்கு அனுப்பபட்டார்.

Advertisement