வாசகர் வட்டம்

மதுரை : மதுரை வாசகர் வட்டம் சார்பில் அல்அமீன் மேல்நிலைப் பள்ளியில் சிறப்புரை, நுால் மதிப்புரைக் கூட்டம் நடந்தது. சண்முகவேலு தலைமை வகித்தார். வாசகர் ஜெயசீலன் வரவேற்றார். ஒருங்கிணைப்பாளர் ராமமூர்த்தி கடந்த மாத செயல்பாட்டு அறிக்கை வாசித்தார்.


தலைமை ஆசிரியர் ஷேக்நபி, ஓய்வு தமிழாசிரியர் திருஞானசம்பந்தம், 'வாழ்வை மேம்படுத்தும் புத்தகங்கள்' என்ற தலைப்பிலும், வாசகர் பிரியதர்ஷினி, கோவேறு கழுதைகள் நுாலுக்கு மதிப்புரையும் பேசினர். தலைமை ஆசிரியர் ஷேக்நபி, மாணவர் தேவராஜ் பாண்டியன், ராஜகோபால் உட்பட பலர் பங்கேற்றனர். எழுத்தாளர் பரமசிவம் நன்றி கூறினார்.

Advertisement