நல்லிணக்க கூட்டம்

மதுரை : மதுரை மாவட்ட ஆதிதிராவிடர் நலத்துறை சார்பில் சமூக நல்லிணக்கம் வன்கொடுமை தடுப்பு சட்ட விழிப்புணர்வு கூட்டம் பொதும்பு அருகே பாசிங்காபுரத்தில் நடந்தது.

மாவட்ட ஆதிதிராவிடர் நல அலுவலர் ராமகிருஷ்ணன் தலைமை வகித்தார். சமூக நீதி மனித உரிமைகள் பிரிவு டி.எஸ்.பி., சரவணரவி, மாவட்ட விழிப்புணர்வு கண்காணிப்பு குழு உறுப்பினர் ராஜ்குமார், இளைஞர் நீதிக் குழும உறுப்பினர் பாண்டியராஜா, தாசில்தார் உதயசங்கர், புள்ளியியல் இன்ஸ்பெக்டர் வில்வபதி பங்கேற்றனர்.

இதில், ஆதிதிராவிடர் நலத்துறையில் அரசின் திட்டங்கள், அவற்றை பயன்படுத்துவது, தடையில்லா கல்வி கற்க உள்ள திட்டங்கள், கல்வியை பாதியில் நிறுத்துவதால் ஏற்படும் பாதிப்பு, போதை பொருட்களால் ஏற்படும் பாதிப்புகள் குறித்து விளக்கப்பட்டன.

Advertisement