போலீஸ் குடியிருப்பில் உலாவரும் விஷ ஜந்துக்கள்

வாடிப்பட்டி: சமயநல்லுார் போலீஸ் ஸ்டேஷன் வளாகத்தில் உள்ள பாழடைந்த போலீஸ் குடியிருப்புகளில் உலா வரும் விஷ ஜந்துக்களால் அப்பகுதியினர் அச்சத்தில் உள்ளனர்.
இங்கு டி.எஸ்.பி., அலுவலகம், அனைத்து மகளிர் ஸ்டேஷன், போலீஸ் மற்றும் போக்குவரத்து போலீஸ் ஸ்டேஷன்கள் உள்ளது. இங்கு பணியாற்றும் போலீசாருக்கு கட்டப்பட்ட ஓட்டு வீடுகள் 15 ஆண்டுகளுக்கு முன் பழுதடைந்தன. இந்த வீடுகளில் மரம், செடிகள் அதிகம் வளர்ந்ததால், சுவர்கள் இடிந்து விழும் நிலையில் உள்ளது.
இங்கு 2 இன்ஸ்பெக்டர், எஸ்.ஐ.,க்கள் மற்றும் டி.எஸ்.பி.,க்கு குடியிருப்புகள் உள்ளது. இந்த பாழடைந்த வீடுகள், நிறுத்தப்பட்டுள்ள வழக்கு வாகனங்களில் பாம்பு உள்ளிட்ட விஷ ஜந்துகள் வசிக்கின்றன. அவ்வப்போது வளாகம், அருகில் உள்ள பள்ளி, குடியிருப்புகளுக்கு படை எடுக்கின்றன. இதனால் அங்குள்ளோர் எந்நேரமும் அச்சமுடனே நடமாடுகின்றனர். பாழடைந்த குடியிருப்புகளை அகற்ற அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என போலீசார் எதிர்பார்க்கின்றனர்.
மேலும்
-
ஆட்டோ வாடகை தராததால் பூ வியாபாரி அடித்துக்கொலை
-
தமிழகத்தில் மிதமான மழை பெய்ய வாய்ப்பு
-
தர்மபுரி தி.மு.க., - மா.செ., மாற்றம் தடங்கத்துக்கு தடங்கல் ஏற்பட்டது எப்படி?
-
சிறுமியை கர்ப்பமாக்கிய மத போதகருக்கு 'போக்சோ' மனைவி, மகனும் சிக்கினர்
-
பல்கலை மாணவி பாலியல் வழக்கில் கைதான ஞானசேகரன் அடகுவைத்த 100 சவரன் மீட்பு
-
டில்லி நெரிசல் பலிகள்: விழிக்குமா ரயில்வே துறை?