தினமலர் செய்தியால் மின்கம்பம் மாற்றம்

வாடிப்பட்டி : வாடிப்பட்டி தாதம்பட்டி மந்தை அருகே ஒட்டாங்குளத்தை சுற்றி உள்ள நடைபாதையில் தினமும் மக்கள் 'வாக்கிங்' செல்கின்றனர். இக்குளத்தின் ஒரு பகுதியில் சேதமடைந்த 2 மின்கம்பங்களுக்கு இடையே இருந்த டிரான்ஸ்பார்மர் சில ஆண்டுகளுக்கு முன் மாற்றப்பட்டது. ஆனால் பழுதான மின் கம்பங்கள் அகற்றப்படவில்லை. சிமென்ட் பூச்சு உதிர்ந்து எலும்புக் கூடாக காட்சி தந்தது குறித்துதினமலர் நாளிதழில் படத்துடன் செய்தி வெளியானது. அதன் எதிரொலியாக மின்வாரியத்தினர் புதிய மின்கம்பத்தை ஊன்றினர்.

Advertisement