யோகா பயிற்சி

மதுரை : மதுரையில் ரயில்வே பாதுகாப்பு படை (ஆர்.பி.எப்.,) வீரர்களுக்கு ஹார்ட்புல்னெஸ் அமைப்பு சார்பில் தியானம், யோகா பயிற்சிகள் அளிக்கப்பட்டன. இன்ஸ்பெக்டர் நிஷாந்த் துவக்கி வைத்தார். பயிற்றுநர்கள் உமா மகேஸ்வரி யோகா, கோபிநாத் தியான முறைகள் குறித்தும் பயிற்சி அளித்தனர். மதுரை, திண்டுக்கல் மண்டலங்களைச் சேர்ந்த 30க்கும் மேற்பட்ட வீரர்கள் பங்கேற்றனர்.

Advertisement