சிப்காட் பணி மக்கள் தீர்மானம்

கொட்டாம்பட்டி : பூதமங்கலம் செட்டிச்சி அம்மன் கோயிலில் கிராம மக்கள் ஆலோசனைக் கூட்டம் நடந்தது.

இதில் கள்ளங்காட்டில் அமைய உள்ள சிப்காட் திட்ட பணிகளை விரைந்து செயல்படுத்த வேண்டும். சிப்காட் திட்டத்தினால் இப்பகுதியில் உள்ள நீர் பாசன ஆதாரமாக விளங்கும் அதிகார கண்மாய், சுற்றுவட்ட கண்மாய், குளங்களில் தொழிற்சாலை கழிவுகள் கலக்காதவாறு அமைக்க வேண்டும்.

சிப்காட்டிற்கு எதிரான கருத்துக்களை கூறுவோர் மீது அரசு அதிகாரிகள் சட்ட நடவடிக்கை எடுப்பது என்பது உள்ளிட்ட 4 தீர்மானங்களை நிறைவேற்றினர்.

Advertisement