முன்னாள் மாணவர்கள் சந்திப்பு

தொண்டி : தொண்டி அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளியில் 1994-95 ம் ஆண்டில் பிளஸ் 2 படித்த முன்னாள் மாணவர்கள் தங்களது குடும்பத்துடன் வெள்ளிவிழாவை கடந்து 30 ஆண்டுகளுக்கு பின் சந்தித்து கொள்ளும் நிகழ்ச்சி நடந்தது. பள்ளிபடிப்பை முடித்துவிட்டு பல்வேறு அரசு, தனியார் நிறுவனம், தொழில்கள் செய்கின்றனர். முன்னாள் மாணவர்கள் தாங்கள் பள்ளியில் படித்த போது நடந்த நினைவுகளையும், தங்களது அனுபவங்களையும், பழைய, புதிய நினைவுகளையும் பகிர்ந்து கொண்டு குடும்ப உறுப்பினர்களை அறிமுகபடுத்திக் கொண்டனர். தங்களுக்கு கல்வி கற்பித்த ஆசிரியர்களுக்கு நன்றி தெரிவித்தனர்.

ஐக்கிய ஜமாத் தலைவர் செய்யதுஅலி, ஹிந்து பரிபாலன சபை தலைவர் ராஜசேகர், பாதிரியார் வியாகுல அமிர்தராஜ் பங்கேற்றனர்.

Advertisement