மக்கள் வரிப்பணத்தை வீணடிப்பதா? மாஜி எம்.எல்.ஏ., சாமிநாதன் கண்டனம்
புதுச்சேரி : ஆளும் அரசு பல வகையில் மக்கள் வரி பணத்தை விரயம் செய்கிறது என, முன்னாள் எம்.எல்.ஏ., சாமிநாதன் குற்றம்சாட்டியுள்ளார்.
அவரது அறிக்கை:
புதுச்சேரியில் 4 ஆண்டுகளில் அமைச்சர்களின் டீ செலவு 28 லட்சம், பூங்கொத்து செலவு 41 லட்சம் மற்றும் மாதத்திற்கு 80 ஆயிரம் ரூபாய் வரை காருக்கு டீசல் போடப்படுவதாக தகவல் அறியும் உரிமைச் சட்டம் மூலம் அதிர்ச்சி தகவல் வெளியாகி உள்ளது.
இதுபோன்று ஆளும் அரசு பலவகையில் மக்களுடைய வரி பணத்தை விரயம் செய்து வருகிறது.
முந்தைய காங்., அரசு இதேபோல் பல்வேறு வகையில் மக்கள் பணத்தை முறைகேடாக பயன்படுத்தி வந்தது. அதே தவறை என்.ஆர்.காங்., அரசும் செய்து வருகிறது. காமராஜர் ஆட்சி என்ற பெயரில் மக்கள் பணத்தை விரயம் செய்யும் அரசாக புதுச்சேரி அரசு உள்ளது. அனைத்து துறையிலும் ஊழல் மலிந்து விட்டது.
ஏழை மக்கள் இறந்து விட்டால் அரசு மருத்துவமனையில் உடனடியாக செல்ல ஆம்புலன்ஸ் வசதி இல்லை. தனியாரிடம் 5,000 ஆயிரம் செலவு செய்து ஆம்புலன்சில் செல்ல வேண்டிய நிலை உள்ளது. இதனை புதுச்சேரி மக்கள் உணர வேண்டும். என் ஆர்.காங்., அரசு தொடர்ந்து செய்து வரும் மக்கள் விரோத போக்கை வன்மையாக கண்டிக்கிறோம். இவ்வாறு அதில், கூறப்பட்டுள்ளது.
மேலும்
-
ஆட்டோ வாடகை தராததால் பூ வியாபாரி அடித்துக்கொலை
-
தமிழகத்தில் மிதமான மழை பெய்ய வாய்ப்பு
-
தர்மபுரி தி.மு.க., - மா.செ., மாற்றம் தடங்கத்துக்கு தடங்கல் ஏற்பட்டது எப்படி?
-
சிறுமியை கர்ப்பமாக்கிய மத போதகருக்கு 'போக்சோ' மனைவி, மகனும் சிக்கினர்
-
பல்கலை மாணவி பாலியல் வழக்கில் கைதான ஞானசேகரன் அடகுவைத்த 100 சவரன் மீட்பு
-
டில்லி நெரிசல் பலிகள்: விழிக்குமா ரயில்வே துறை?