இன்று ஜெ.,பிறந்தநாள் விழா அ.ம.மு.க.,பொதுக்கூட்டம் 

ராமநாதபுரம் : ராமநாதபுரத்தில் அ.ம.மு.க., சார்பில் முன்னாள் முதல்வர் ஜெயலலிதா பிறந்தநாளை முன்னிட்டு இன்று மாலை பொதுக்கூட்டம் நடக்கிறது.

ராமநாதபுரம் அரண்மனை அருகே நடக்கும் பொதுக்கூட்டத்திற்கு முன்னாள் எம்.எல்.ஏ., முருகன் தலைமை வகிக்கிறார். பொதுச்செயலாளர் டி.டி.வி. தினகரன் நலத்திட்ட உதவிகளை வழங்கி பேசுகிறார். மதுரை புறநகர் மாவட்டச் செயலாளர் டேவிட் அண்ணாதுரை, தொழில் நுட்ப மகளிர் பிரிவு செயலாளர் ஜெசிமாபானு, மருத்துவர் அணி இணை செயலாளர் டாக்டர் கபிலன், இளைஞர் பாசறை இணைச்செயலாளர் முரளி, ஒன்றிய செயலாளர்கள் முத்தீஸ்வரன், கணேசன், தனபால், நகர செயலாளர்கள் மாணிக்கவாசகம், இளஞ்செழியன் பங்கேற்கின்றனர்.

Advertisement