வேளாண் மாணவர்களுக்கு முதல்வர் பட்டமளிப்பு

காரைக்கால்: காரைக்கால், பண்டித ஜவஹர்லால் நேரு வேளாண் கல்லுாரி மற்றும் ஆராய்ச்சி நிலையத்தில் பட்டமளிப்பு விழா நடந்தது.

விழாவிற்கு முதல்வர் ரங்கசாமி தலைமை தாங்கி, மாணவர்களுக்கு பட்டங்கள் வழங்கி பேசினார்.

வேளாண் அமைச்சர் தேனீ ஜெயக்குமார் முன்னிலை வகித்தார். கல்லுாரி முதல்வர் புஷ்பராஜ் வரவேற்றார்.

விழாவில் 110 மாணவர்களுக்கு பட்டங்கள் வழங்கப்பட்டன. சிறந்த கல்வி மற்றும் ஆராய்ச்சியில் சாதனை படைத்த மாணவர்களுக்கு சிறப்பு விருதுகள் வழங்கப்பட்டன.

நிகழ்ச்சியில் அமைச்சர் திருமுருகன், எம்.எல்.ஏ.,க்கள் நாஜிம், சிவா, நாகதியாகராஜன், கலெக்டர் சோம சேகர் அப்பாராவ் உள்ளிட்ட பலர் பங்கேற்றனர்.

Advertisement