கம்பத்தில் மொபட் மோதி சமையல் தொழிலாளி பலி

கோபி: சத்தியமங்கலம் அருகேயுள்ள வடக்குபேட்டையை சேர்ந்தவர் ஜோதிமணி, 58, சமையல் தொழிலாளி; இவரின் மனைவி லட்சுமி, 49; இருவரும் ஹோண்டா ஆக்டிவா மொபட்டில் நேற்று மதியம் பாரியூர் சாலையில் சென்றனர்.


அப்போது சாலையோர மின்கம்பத்தில் ஸ்கூட்டர் மோதியது. இதில் லட்சுமிக்கு எந்த காயமும் ஏற்படவில்லை. ஆனால் பலத்த காயமடைந்த ஜோதிமணி, கோபி அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லும் வழியில் இறந்தார்.

Advertisement