சென்னிமலையில் புதைவட மின் கேபிள் பதிப்பு நிறைவு பெறாத பணியால் மக்கள் கொதிப்பு

சென்னிமலை: சென்னிமலை டவுனில் கோவில் தேரோடும் நான்கு ராஜவீதிகளில், மின்சார விபத்துக்களை தடுக்கவும், மின் கம்பிகள் இல்லாமல் செய்யவும், மின் புதை வட கேபிள் அமைக்கும் பணி கடந்த ஆண்டு பிப்., மாதம், 77 லட்சம் ரூபாய் மதிப்பில் தொடங்கியது. ஓராண்டாகியும் பணி நிறைவு பெறவில்லை. கடந்த ஜன., மாதம் நான்கு ராஜவீதிகளிலும் படு வேகமாக பணி நடந்தது. அதன் பின்பு மீண்டும் மந்தமாகி விட்டது.


இந்தப்பணியை கண்காணிக்க வேண்டிய மின் வாரியம் மற்றும் பேரூராட்சி நிர்வாகம் என்ன செய்கிறதோ தெரியவில்லை. ஈரோடு மாவட்ட நிர்வாகம் விரைந்து நடவடிக்கை எடுத்து, பங்குனி உத்திர தேரோட்டத்துக்குள் பணிகளை முடிக்க, மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Advertisement