கல்லுாரி ஆண்டு விழா

விருதுநகர் : விருதுநகர் காமராஜ் பொறியல், தொழில்நுட்பக் கல்லுாரியில் 26வது ஆண்டு விழா முன்னாள் இந்திய ஹாக்கி அணி தலைவர் பத்மஸ்ரீ பாஸ்கரன் தலைமையில் நடந்தது. கல்லுாரி செயலாளர் தர்மராஜன் வரவேற்றார். ஆண்டு அறிக்கையை உடற்கல்வி இயக்குனர் புஷ்பராஜ் வழங்கினார்.

பத்மஸ்ரீ பாஸ்கரன் பேசுகையில், மாணவர்கள் தங்களின் எண்ணங்களை உயர்ந்த குறிக்கோளாக கொள்ள வேண்டும். எந்தச் சூழ்நிலையிலும் சேர்ந்து போகாமல் இருக்க வேண்டும், என்றார்.

அர்ஜூனா விருது பெற்ற ஜெர்லின் அனிகா கலந்து கொண்டார். இதில் கல்லுாரி நிர்வாக உறுப்பினர்கள், துறைத் தலைவர்கள், ஆசிரியர்கள், ஆசிரியர் அல்லாத பணியாளர்கள் உள்பட பலர் பங்கேற்றனர். கல்லுாரி முதல்வர் செந்தில் நன்றி கூறினார்.

Advertisement