ஹாக்கி: இந்தியா ஏமாற்றம்

புவனேஸ்வர்: புரோ லீக் ஹாக்கி போட்டியில் இந்திய பெண்கள் அணி 2-4 என்ற கணக்கில் நெதர்லாந்திடம் தோல்வியடைந்தது.
சர்வதேச ஹாக்கி கூட்டமைப்பு சார்பில் பெண்களுக்கான புரோ லீக் 6வது சீசன் (2024-25) நடக்கிறது. மொத்தம் 9 அணிகள் பங்கேற்கின்றன. ஒடிசா மாநிலம் புவனேஸ்வரில் நடந்த லீக் போட்டியில் இந்தியா, நெதர்லாந்து அணிகள் மோதின.
போட்டி துவங்கிய 7வது நிமிடத்தில் நெதர்லாந்தின் எம்மா ரெய்ஜ்னென் ஒரு பீல்டு கோல் அடித்தார். இந்திய அணிக்கு 18 வது நிமிடத்தில் 'பெனால்டி கார்னர்' வாய்ப்பு கிடைத்தது. இதை உதித்தா கோலாக மாற்றினார்.
34, 40வது நிமிடங்களில் நெதர்லாந்தின் பெலிஸ், வான் டர் பே தலா ஒரு கோல் அடித்தனர். 42வது நிமிடத்தில் மீண்டும் அசத்திய உதித்தா, 'பெனால்டி கார்னரில்' கோல் அடித்தார். மறுபக்கம் பெலிஸ் (47) இப்போட்டியில் இரண்டாவது கோல் அடித்தார். முடிவில் இந்திய அணி 2-4 என்ற கோல் கணக்கில் தோல்வியடைந்தது.
இதுவரை விளையாடிய 7 போட்டியில், 2 வெற்றி, ஒரு 'டிரா', 3 தோல்வி என 7 புள்ளிகளுடன் 7வது இடத்தில் தொடர்கிறது இந்தியா.
சவிதா '300'
இந்திய அணி கோல்கீப்பர் சவிதா புனியா. நேற்று தனது 300 வது போட்டியில் களமிறங்கினார். இந்த இலக்கை எட்டிய இரண்டாவது இந்திய வீராங்கனை ஆனார் சவிதா. வந்தனா கட்டாரியா (319 போட்டி) முதலிடத்தில் உள்ளார்.
* தீப் கிரேஸ் (268), ராணி ராம்பால் (254), சுஷிலா சானு (251) 3, 4, 5வது இடங்களில் உள்ளனர்.
மேலும்
-
அவதுாறு வழக்கு பா.ஜ., பிரமுகர் கோர்ட்டில் சரண்
-
ஜெய்சங்கர், 61 நாடுகளின் துாதர்கள் காஜிரங்கா பூங்காவை சுற்றி பார்த்தனர்
-
இன்று தற்செயல் விடுப்பு போராட்டம் ஜாக்டோ - ஜியோ அறிவிப்பு
-
எனக்கு வேறு வாய்ப்புகள் உள்ளன காங்., - எம்.பி., சசிதரூர் காட்டம்
-
மாஞ்சா நுால் விற்பனை தடை நீட்டிப்பு
-
ஈரோடு - ஒடிசா ரயில் ஏப்., வரை நீட்டிப்பு