ஈரோடு - ஒடிசா ரயில் ஏப்., வரை நீட்டிப்பு
சென்னை, ஈரோட்டில் இருந்து சென்னை பெரம்பூர் வழியாக ஒடிசாவுக்கு இயக்கப்படும் வாரந்திர சிறப்பு ரயில், ஏப்., வரை நீட்டித்து இயக்கப்பட உள்ளது.
சாம்பல்பூர் - ஈரோடு இடையே இயக்கப்படும் வாரந்திர சிறப்பு ரயில்களுக்கு, பயணியரிடம் நல்ல வரவேற்பு கிடைத்து வருகிறது. பயணியரின் தேவையை கருத்தில் கொண்டு, இந்த ரயில்களின் சேவை நீட்டித்து இயக்கப்பட உள்ளது. ஒடிசா மாநிலம், சாம்பல்பூர் - ஈரோடுக்கு புதன்கிழமைகளில் இரவு 8:30 மணிக்கு இயக்கப்படும் வாரந்திர சிறப்பு ரயில், மார்ச் 12 முதல் ஏப்., 30 வரை நீட்டித்து இயக்கப்படுகிறது.
இதேபோல், ஈரோடு - சாம்பல்பூருக்கு வெள்ளிக்கிழமைகளில் இரவு 11:15 மணிக்கு இயக்கப்படும் சிறப்பு ரயில், மார்ச் 12 முதல் மே 2 வரை நீட்டித்து இயக்கப்படும், என தெற்கு ரயில்வே தெரிவித்துள்ளது.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
மேலும்
Advertisement
Advertisement