அவதுாறு வழக்கு பா.ஜ., பிரமுகர் கோர்ட்டில் சரண்

கோட்டயம் : பிற மதத்தினர் பற்றி தவறாக பேசியதாக, கேரள மாநில பா.ஜ., தலைவர்களில் ஒருவரான பி.சி.ஜார்ஜ் மீது, முஸ்லிம் யூத் லீக் தலைவர்களில் ஒருவரான முகமது ஷிஹாப் என்பவர் புகார் அளித்தார்.

எரட்டுபேட்டை போலீசில், பி.சி.ஜார்ஜ் மீது மூன்று பிரிவுகளில் வழக்கு பதிவு செய்யப்பட்டது. முன்ஜாமின் கோரி, கோட்டயம் மாவட்ட கோர்ட்டில் மனு தாக்கல் செய்தார். அந்த மனு, தள்ளுபடி செய்யப்பட்டது.

இதையடுத்து, சரணடைய இரண்டு நாட்கள் அவகாசம் கேட்டு, மனு தாக்கல் செய்தார். இதை ஏற்க மறுத்த உயர் நீதிமன்றம்,'இத்தகைய நபர்களுக்கு வழங்கினால், அது தவறான முன்னுதாரணத்தை ஏற்படுத்தி விடும்' என உத்தரவிட்டது.

இதையடுத்து, கோட்டயம் மாவட்ட கோர்ட் முன், பி.சி.ஜார்ஜ் நேற்று சரணடைந்தார்.

Advertisement