ஈக்காடில் வீட்டு மனை பட்டா விரைவில் வழங்கப்படும்: கலெக்டர்

திருவள்ளுர்,''நகர் பகுதியில் ஆட்சேபணையற்ற பகுதிகளில் நீண்ட நாளாக குடியிருந்து வருவோருக்கு, விரைவில் இலவச வீட்டு மனை பட்டா வழங்கப்படும்,'' என, கலெக்டர் தெரிவித்தார்.

சென்னை புறநகரைச் சுற்றியுள்ள பகுதியில் 'பெல்ட் ஏரியா' பகுதிகளில் வரன்முறை திட்டத்தின் கீழ் ஆட்சபணை அற்ற புறம்போக்கு நிலத்தில், நீண்ட நாட்களாக குடியிருந்து வருவோருக்கு இலவச வீட்டு மனை பட்டா வழங்க அரசாணை வெளியிடப்பட்டு உள்ளது.

அதன் அடிப்படையில் திருவள்ளுர் நகர் பகுதிகளில் வரன்முறை திட்டத்தின் கீழ் ஆட்சேபணை அற்ற புறம்போக்கு நிலத்தில் நீண்ட நாளாக குடியிருந்து வரும் இலவச வீட்டு மனை பட்டா வழங்குவதற்காக கணக்கெடுப்பு பணி நடைபெற்று வருகிறது.

திருவள்ளுர் மாவட்டம், ஈக்காடு பாளையம்மன் கோவில் தெருவில் வருவாய் துறையினர் கணக்கெடுப்பு நடத்தி வருகின்றனர். அப்பணியினை, நேற்று, கலெக்டர் பிரதாப் நேரில் சென்று பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார்.

பின், அவர் கூறுகையில், 'நகர் பகுதியில் வரன்முறை திட்டத்தின் கீழ் நடைபெறும் இப்பணி நிறைவடைந்து, விரைவில் அவர்களுக்கு இலவச பட்டா வழங்குவதற்கு நடவடிக்கை மேற்கொள்ளப்படும்' என்றார்.

உடன், திருவள்ளுர் தாசில்தார் ரஜினிகாந்த் மற்றும் வருவாய்த் துறை அலுவலர்கள் உடன் இருந்தனர்.

Advertisement