வங்கதேச தம்பதி கைது

திருப்பூர்; திருப்பூரில் முறைகேடாக தங்கியிருந்த வங்கதேச தம்பதி உட்பட, மூன்று பேரை போலீசார் கைது செய்தனர்.
திருப்பூர் மாநகரில் வடமாநிலத்தினர் போர்வையில் தங்கியுள்ள வங்கதேசத்தினரை போலீசார் கண்காணித்து கைது செய்து வருகின்றனர். கடந்த, 2 மாதங்களில், 115 பேரை போலீசார் கைது செய்துள்ளனர். அவ்வகையில், இடுவம்பாளையம், முருகம்பாளையம் வங்கதேசத்தினர் சிலர் தங்கியுள்ளதாக வீரபாண்டி போலீசாருக்கு தகவல் கிடைத்தது. அப்பகுதியில் ஆய்வு செய்து சந்தேகப்படும் விதமாக சிலரிடம் விசாரித்தனர்.
அதில், வங்கதேசத்தை சேர்ந்த மூசா அலி, 26, மனைவி நிசா பேகம், 23 மற்றும் உறவினர் ரோனி அலி, 22 என, மூன்று பேரும் உரிய ஆவணங்கள் இல்லாமல் முறைகேடாக தங்கி, பனியன் நிறுவனத்தில் வேலை செய்து வந்தது தெரியவந்தது. கடந்த, இரு ஆண்டுகளாக தம்பதி தமிழகம் மற்றும் பெங்களூருவில் இருந்தது தெரிந்தது. கடந்த, ஒன்றரை ஆண்டுக்கு முன் தம்பதிக்கு, இரு குழந்தைகள் திருப்பூர் அரசு மருத்துவமனையில் பிறந்துள்ளது. மற்றொருவர் திருப்பூர் வந்து, நான்கு மாதங்களாகிறது. மூன்று பேரையும் வீரபாண்டி போலீசார் கைது செய்தனர்.