சித்தியை வெட்டியவருக்கு வலை

காஞ்சிபுரம், காஞ்சிபுரம் மாண்டுகணீஸ்வரர் கோவில் தெருவைச் சேர்ந்தவர் ஜெயராமன், 45. இவரது இரண்டாவது மனைவி ரேவதி, 35, மூன்று மகன்களுடன் வசித்து வருகிறார். ஜெயராமனின் முதல் மனைவி நாகேந்திரா, 37. மகள் மற்றும் மகன் தினேஷ், 21, ஆகியோருடன் வசித்து வருகிறார்.

ஜெயராமனின் முதல் மனைவிக்கும், இரண்டாவது மனைவிக்கும் இடையே தகராறு ஏற்பட்டுள்ளது. இதில், நாகேந்திராவை, ரேவதி தாக்கியதாக கூறப்படுகிறது. இதையறிந்த தினேஷ், நேற்று மாலை 5:00 மணிக்கு, நண்பர்கள் சிலருடன் சேர்ந்து, ரேவதியின் கைகளில் வெட்டி விட்டு தப்பியோடினார்.

காயமடைந்தவரை மீட்ட அக்கம்பக்கத்தினர், காஞ்சிபுரம் அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். மேல்சிகிச்சைக்காக, சென்னை ராஜிவ் காந்தி அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். சிவ காஞ்சி போலீசார் விசாரிக்கின்றனர்.

Advertisement