குன்றத்து ராஜகோபுரத்திற்கு முகூர்த்தக்கால் பூஜை
திருப்பரங்குன்றம்: திருப்பரங்குன்றம் சுப்பிரமணிய சுவாமி கோயில் ராஜகோபுரத்தில் ரூ.40 லட்சத்திற்கும் அதிகமான செலவில் உபயதாரர் மூலம் திருப்பணிகள் துவங்கும் வகையில் நேற்று காலை முகூர்த்தக்கால் ஊன்றப்பட்டது. சிவாச்சாரியார்கள் ரமேஷ், அஜித், முகூர்த்த கால் மூங்கிலுக்கு சிறப்பு பூஜை, தீபாராதனை செய்து ராஜகோபுரம் அருகில் ஊன்றினர்.
தியாகராஜர் பொறியியல் கல்லுாரி தாளாளர் ஹரி தியாகராஜன், கோயில் அறங்காவலர் குழுத் தலைவர் சத்யபிரியா, துணை கமிஷனர் சூரிய நாராயணன், அறங்காவலர் மணிச்செல்வம், தி.மு.க., தெற்கு மாவட்ட துணைச் செயலாளர்பாலாஜி, கோயில் பணியாளர்கள் கலந்து கொண்டனர்.
உப கோயில்களான மலை மேல் காசி விசுவநாதர் கோயில், சன்னதி தெரு சொக்கநாதர்கோயில், மலை அடிவாரத்திலுள்ள பழநி ஆண்டவர் கோயில், படிக்கட்டு விநாயகர் கோயிலில் புனரமைப்பு பணி நடக்கிறது. அங்காள பரமேஸ்வரி குருநாதசுவாமி கோயில், பாம்பலம்மன் கோயில்களில் விரைவில் கும்பாபிஷேக பணிகள் துவங்க உள்ளது. உப கோயில்கள் திருப்பணிகளை அறங்காவலர் குழுவினர் சொந்த செலவில் செய்து வருகின்றனர்.
மேலும்
-
குழந்தைக்கு பாலியல் துன்புறுத்தல்; 16 வயது சிறுவன் கைது
-
பஸ் வசதி இன்றி மாணவர்கள் அவதி
-
செயற்கை தடகள டிராக்கில் ரப்பர் துகள்கள் ஒட்டும் பணி
-
கிராமமா... நகரமா... வாழ்விடம் தெரியாமல் வசிக்கும் மக்கள்: அனுப்பானடி தாய்நகர் குடியிருப்போர் அவலம்
-
சமயநல்லுாரில் ரயில்வே கேட் அவதி
-
வங்கக்கடலில் நிலநடுக்கம்! கோல்கட்டாவில் உணரப்பட்ட அதிர்வுகள்